மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொது பலன்
அசுவினி - பரணி - கிருத்திகை 1ம் பாதம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீடு, ஆள் அதிகாரங்களுடனும் இருப்பார்கள். அரசாங்கதால் கௌரவிக்கப்படுவார்கள்.அற்ப ஆசை இல்லாதவர்களாகவும், வாக்கு வன்மையும்,கோப குணமும்,முரட்டு சுபாவங்களுடனும், கம்பீரமான தோற்றங்களுடனும் இருப்பார்கள். பொன்னும் பொருளும், கல்வியில் திறன் பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்று பொது சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
செவ்வாய்
கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. ஆங்கிலத்தில் 'மார்ஸ்' (மார்ச்) என்று அழைக்கப் படும் இந்த செவ்வாய் கிரகம் வீரத்தையும், வலிமையையும், வெற்றியையும் வழங்கக் கூடிய தகுதி உடையவர். பக்தர்கள் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் சரும உபாதைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதும் குணங்களைக் கொண்ட திருக்குலமாகிய சித்தாமிர்த குளத்தில் குளியல் செய்கின்றனர். மேலும் இத்தலத்திற்கு விஜயம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். ரோமானியர்களும் இவரைத் தங்களின் குருவாகக் கொண்டுள்ளனர். சுப்ரமணிய கடவுளின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமாதேவியின் மைந்தனாவார். இவ்விடம் புள்-இருக்கு-வேலூர் என்றும் அழைக்கப் படுகிறது. ஜடாயு என்னும் கழுகு சீதா தேவியை கடத்திச் செல்ல முயன்ற ராவணனை வீரத்துடன் தடுத்து எதிர்த்த பொழுது இராவணனால் சிறகுகள் வெட்டப்பட்டு, இத்தளத்தில் விழுந்திறந்து மோட்சகதி அடைந்ததாக இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாம் இந்த ஜாடாயுவை தகனம் செய்த இடமான ஜடாயு குண்டத்தை நாம் காணலாம்.
இந்த வைதீஸ்வரன் கோவில் எப்பொழுதும் பக்தகோடிகள் நிரம்பி காணப் படுகின்றது. இங்கு அங்காரகன் என்னும் செவ்வாய் -உடன் வைத்தியநாத சுவாமி (சிவா) தனது துனைவி தையல் நாயகி என்கின்ற வலம்பிகையுடன் எழுந்தருளி தனதருளால் பக்த கோடிகளுக்கு ஆரோக்கியத்தினையும் வளமான வாழ்க்கையினையும் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருக கடவுளுக்கு கிருத்திகையில் விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், காளமேக புலவர் ஆகியோர் இங்கு வந்து பல பாடல்களால் இத்தலத்தினையும் எழுத்தருளும் தெய்வங்களையும் வாழ்த்திப் பாடியுள்ளார்கள். அங்காரகன் எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு வேறு எங்கும் காணாத சிறப்பிடமாக இத்தலம் கருதப் படுகின்றது.

No comments