Header Ads

  • Breaking News

    சுக்கிரன் 12 பாவங்களில் ஏற்படுத்தும் பலன்கள்

    நவ கிரகங்களில் களத்திர காரகன் என வர்ணிக்கப்படும் சுக்கிரன் மன வாழ்வு அமைவதற்கு மிக முக்கிய கிரகமாக விளங்குகிறார். பொதுவாக திருமண வாழ்வு, ஆடை, ஆபரணம், கலை, சுக வாழ்வு, வண்டி வாகனம், பெண் தொடர்பு, உடல் உறவு, வீடு மற்றும் எண்ணற்ற விஷயங்களுக்கு காரகனான சுக்கிரன், ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் தான் சுக வாழ்வு, திருமண வாழ்வு, வசதி வாய்ப்பு உண்டாகும். 

    சுக்கிரன் பலம் இழந்தால் ரகசிய நோய்கள், மண வாழ்வு உடல் உறவு போன்ற விஷயங்களில் பிரச்சனை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் சென்றால் அஸ்தங்கம் பெற்று பலம் இழப்பார். பொதுவாக சுக்கிரன் பலம் இழக்காமல் இருப்பது மிகவும் நல்லது. பெண் கிரகமான சுக்கிரன் ரிஷபம் துலாத்தில் ஆட்சியும், கன்னியில் நீசமும், மீனத்தில் உச்சமும் பெறுவார். 

    அசுரர்களுக்கு தலைவனாக சுக்கிரனை வர்ணித்து அசுர குரு எனவும் அமைப்பார்கள். பொதுவாக சுக்கிரன் தனித்து இருப்பது 3ல் எத்தனை கிரக சேர்க்கை பெறுகிறதோ அத்தனை தாரம் உண்டாகும். சுக்கிரனுக்கு சனி புதன் ராகு நட்பு கிரகம். குரு செவ்வாய் நீசம், சூரியன் சந்திரன் பகைவர்.

    ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

    ஜென்ம லக்கினத்தில்
    சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

    2ல் இருந்தால்
    சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

    3ல் சுக்கிரன்
    சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

    சுக்கிரன் 4ல்
    சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

    5ம் வீடு
    சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

    6ல் இருந்தால்
    சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

    7ல் இருந்தால்
    சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.

    8ல் இருந்தால்
    சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.

    9ல் இருந்தால்
    சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

    10ல் இருந்தால்
    சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

    11ல் இருந்தால்
    சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

    12ல் இருந்தால்
    சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.

    DESCRIBED AS NEO PLANETS VENUS KALATTIRA KARAKAN FORMATION OF MENTAL LIFE IS THE MOST IMPORTANT PLANET. NORMALLY MARRIAGE, CLOTHING, JEWELRY, ART, JOYS OF LIFE, CAR, VEHICLE, GIRL, SEX, HOME AND COUNTLESS THINGS KARAKANANA VENUS, ONE OF THE JOYS OF LIFE ARE STRONG IN THE HOROSCOPE, MARRIAGE, FACILITY CHANCE.

    CONFIDENTIAL DISEASES VENUS LOSES POWER, THE MARRIAGE PROBLEM WITH THINGS LIKE SEX, HAPPINESS AND LIFE WILL BE AFFECTED. IF YOU GO TO GET VERY CLOSE TO THE SUN, VENUS ASTANKAM LOSE STRENGTH. VENUS IS USUALLY QUITE GOOD AT BEING WITHOUT LOSING STRENGTH. THE GIRL ON THE PLANET VENUS IN TAURUS TULAT REGIME NICAMUM IN VIRGO, MINAT SUPREME ACCRUE.

    VENUS WAS DESCRIBED AS THE LEADER OF THE GIANTS SET ASURA GURU. GENERAL ADMISSION TO THE PLANET VENUS GETS SO MANY MONOGAMOUS 3 WILL STAY SEPARATE. MERCURY, VENUS, SATURN, RAHU AND FRIENDLY TO THE PLANET. NADIR GURU TUESDAY, ENEMY OF THE SUN AND THE MOON.

    IF VENUS IS THE WORST OF SINS LAKKINATTIRKU 12 RESULTS

    LAKKINAT SWORN IN
    IF VENUS LAKKINAT WORST BEAUTY, ATTRACTIVE BODY STRUCTURE, FACILITY, OPPORTUNITY, GOOD BODY, COURAGE AND BRAVERY, AS WELL AS JOYS OF LIFE, GOOD FAMILY, CLOTHING, JEWELERY MERGERS, OCCUR. VENUS LOSES STRENGTH IS BETTER.

    IF 2
    IF VENUS SWORN LAKNATTIRKU 2 FACILITY, GOOD FAMILY, BEAUTIFUL EYES, GOLD, MATERIAL COMPOSITION CAN HAVE A NORMAL LIFE, THE LIFE OF LUXURY. WHILE OTHERS MAY TALK OF EXOTIC ATTRACTIONS. THE IMPACT OF MERGERS SAPPED SINNERS IN THE EYES, THE WRONG GIRL TO MAKE BAD HABIT.

    VENUS IN 3
    3 IF VENUS BID ETUKKAM ADVANTAGE, ART, MUSIC, PASSION, AND WILL LIKELY FEATURE. WITH THE BIRTH OF THE YOUNGEST POSITION YOUNGER SISTER WILL BE BORN. MOON RECEIVED THE COMBINATION OF ART, MUSIC AND RECORD THE EVENT.

    VENUS IN THE 4TH
    4 IF VENUS' KNOWLEDGE, EDUCATION, ANIME IMMOVABLE PROPERTY, JOYS OF LIFE, THE LIFE OF LUXURY WILL BE CREDITED TO HIS GENEROSITY. IF VISIBILITY IS USUALLY CUPAR MOTHER LIVES A LONG LIFE WILL RISE. 4. POSITION THE HOUSE FOR HER VIRGINITY, CHASTITY PERVERTED WOMAN WILL RECEIVE A COMBINATION OF SINNERS.

    5TH HOUSE
    IF VENUS IS FROM 5 TO FACILITATE INDIGENOUS PROPERTY, EXCELLENCE IN EDUCATION, HAPPY MARRIED LIFE, YOGA CAN BABY GIRL. ADMISSION VENUS RECEIVES SINNERS LOVE MARRIAGE MIXED RESULTS.

    IF 6
    6 IF THE RELATIVES BENEFIT FROM VENUS, UNNECESSARY COSTS, WASTE, THE LEVEL OF DELAYED MARRIAGE, MAY HAVE A NORMAL LIFE. IF THE STRENGTH OF THE MARRIAGE PROBLEM GETTING LOST SINNERS ADDITIVE, EFFECT ON THE EYE, IN THE WAY OF WOMEN'S RESISTANCE, SECRET DISEASES OCCUR.

    IF 7
    VENUS LOOKS AUSPICIOUS PLANETARY COMBINATION IF THE MARITAL HAPPINESS, JOY, A LIKELY CAUSE. IF YOU RECEIVED SO MANY MONOGAMOUS KIRAKAMO PLANETARY COMBINATION. SUPER GOOD COMBO. IF YOU RECEIVED A MIXED COMPOSITION OF SINNERS LOVE MARRIAGE, LOST THE STRENGTH OF THE MARRIAGE PROBLEMS OCCUR.

    IF 8
    IF YOU HAVE A NORMAL LIFE, AFFECTING 8 FROM VENUS, DELAY MARRIAGE, HOME, VEHICLE BARRIER CAN SUBSTITUTE. ADMISSION SINNERS PARENTS, PARENTS IN THE SUN ASTANKAM SECRET DISEASE, THE BODY'S INABILITY TO ENGAGE IN A RELATIONSHIP, IN THE EYES OF THE DISEASE OCCUR.

    IF 9
    9. IN VIEW OF THE PLANET VENUS AND THE COMBINATION OF IT WITH THE FATHER OF SUPER LONG LIFE, WEALTH, PRESTIGE, CONVENIENCE, THE OPPORTUNITY TO TAKE ADVANTAGE ORIGIN, PROPERTY, BY JOINING YOGA WIFE, HAPPY LIFE KUTUMUPA, REPUTATION IN THE COMMUNITY WILL BE INVOLVED IN PUBLIC AFFAIRS. ADMISSIONS RECEIVES SINNERS AWAY STD YOGA, GIRL MERGERS OCCUR.

    IF 10
    10. IF VENUS IN ART, MUSIC, GIRLS GAIN THROUGH THE USE OF MATERIALS, THE GIRL WILL RISE BY RELEVANT INDUSTRY PROFESSIONALS. CLOTHING, JEWELLERY, CAR, VEHICLE CAUSED BY THE AUSPICIOUS. USERS CAN DO SOME PARTNERSHIP WITH HIS WIFE. ADMISSIONS RECEIVES SINNERS WILL ENGAGE IN SOME WRONGDOING.

    IF IN 11
    IF VENUS IS IN 11 KNOWLEDGE, CONVENIENCE, OPPORTUNITY, AN UNEXPECTED COMBINATION OF HIS MOVABLE AND IMMOVABLE PROPERTY, MERGERS, WITH THE ADVANTAGE THAT BY BIRTH, FEMALE, SENIOR YOGA CAN WITH THE BIRTH. IF WE RECEIVE A LOT OF CONTACT WITH THE GIRL VESPER SINNERS ENROLLMENT, THE STATE WILL MAKE THE WRONG WAY. CAN LOSE WEIGHT THE WRONG GIRL.

    IF IN 12
    VENUS SUPER 12 WITH THE COMBINATION OF VISION AND HAVE A NORMAL LIFE, THE LIFE OF LUXURY, THE BODY WILL HAVE TO SPEND A LOT OF TIME IN RELATION TO THE JOY OF ACCOMPLISHMENT WITHOUT BORDER PLEASURE. ADMISSION SINNERS GET VENUS LOSES POWER LOSS ASSOCIATED WITH THE WRONG GIRL, EVIL CUSTOMS, SECRET DISEASES AFFECTING THE EYES, EXTRAVAGANT, CAUSE POVERTY.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728