Header Ads

  • Breaking News

    திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

    திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT39Z36zjueQW6HzQ7yLAew-F5y2zuaWP0OfgTpwHCyFdvrNDatC2fdKTY8r-Jsaq7Zv1Sh2I3c2qZMAJoiFuy4MxPKLs32y8WnQXXBK1Ws8wBI0d2liRNtD37OTLGedyfAEUYkda7FJR6/s400/shiva-parvati-wedding.jpg


    திருமண வயது வந்தவுடன்  தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல்  திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற  நிறைவான வாழ்க்கையாக அமைய  வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு , இந்த கனவு அனைவருக்கும் பலிப்பதில்லை, பெறோர்கள் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கை துணையை ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கும் பொழுது , நட்சத்திர பொருத்தம் எனும் ஒரு அமைப்பையும் , செவ்வாய் , ராகு கேது என்ற அமைப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வரனையோ அல்லது வதுவையோ தவறாக தேர்ந்தெடுப்பது மட்டுமே இதற்க்கு முக்கிய காரணம் . இதற்க்கு சரியான தீர்வு என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம் .

    வரனை ( மணமகனை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்ணின்  பெற்றோர்கள், மணமகனின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

    1)  ஜாதகனுக்கு லக்கினம் எனும் முதல் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பான் , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , தீய பழக்க வழக்கங்கள் அற்றவனாக இருப்பான் , ஜாதகனுக்கு வாழ்க்கையில் சுயமாக முன்னேற்றம் பெரும் அமைப்பை தரும்.

    2 ) ஜாதகனுக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு நிலையான வருமானம் , இனிமையாக பேசும் தன்மை , மனைவியை  உயிருக்கு உயிராக நேசிக்கும் தன்மை , நல்ல பாரம்பர்ய குடும்பத்தை சார்ந்த அமைப்பு , மனைவியிடம் இறுதிவரை அன்பு மற்றும் பாசம் வைக்கும்  தன்மை என ஜாதகர் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருப்பார்.

    3 ) ஜாதகனுக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகனுக்கு தன் குலம் விளங்க புத்திரன் கிடைப்பான் . மேலும் ஜாதகனுக்கு பரதேஷ ஜீவனம் அமையாது . சிறு துன்பம் வந்தாலும்  பல பேர் உதவி செய்வார்கள் .

    ( சில பேர்  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தால் புத்திரன் இல்லை என்று சொல்வார்கள், இது தவறான கருத்து ரிஷபம் , மிதுனம் ,கடகம்,கன்னி, துலாம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள்  பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்து இங்கு ராகு கேது அமர்ந்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கும் என்பதை நினைவில் 
    கொள்க .)

    4 ) ஜாதகனுக்கு சத்துரு ஸ்தானம் எனும் ஆறாம் வீடு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படி நல்ல நிலையில்  இருக்கு அமைப்பை பெற்ற ஜாதகன் தனது மனைவியை எந்த நிலையிலும் கைவிட மாட்டான் , மேலும் வாழ்க்கையின் இறுதிவரை  தம்பதியினர் இருவரும் இணை பிரியாத நிலை தரும் .

    5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால்  ஜாதகருக்கு தனது மனைவி தன் உடலில் ஒரு பாதி என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் , மற்ற பெண்களை தனது தாயாகவும் , சகோதரியாகவும் பாவிக்கும் தன்மை உள்ளவராக காணப்படுவார் , தனது வாழ்க்கை துணைக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் கொண்டவராக இருப்பார் , கணவனும் மனைவியும் அன்யோநியமாக குடும்பம் நடத்தும் தன்மை அமையும் , இல்லற வழக்கை எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கும் .

    6 ) ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீடு மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தனது மனைவியின், அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் ஜாதகருக்கு ஏற்ப்படும் , திருமணத்திற்கு பிறகு விரைவான முன்னேற்றம் பெற இந்த ஜீவன ஸ்தானம் மிக நன்றாக இருப்பது முக்கியம் , மேலும் நிரந்தர தொழில் அமையும் நல்ல குண இயல்பை ஜாதகர் கொண்டிருப்பார் .

    மேற்கண்ட ஸ்தானங்கள்  ஒரு ஜாதகனுக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகனை 100 சதவிகிதம்  நம்பி தனது மகளை பெற்றோர்கள் கன்னிகா தானம் செய்து வைக்கலாம் , அப்படி செய்தால் நிச்சயம் திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள்.


    வதுவை ( மணமகளை ) தேர்ந்தெடுக்கும் பொழுது பிள்ளையின்  பெற்றோர்கள், மணமகளின்  ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :

    1)  ஜாதகிக்கு  லக்கினம் எனும் முதல் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்கினம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகி  மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பாள்  , மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும் , மற்றவர்களை அனுசரித்து செல்லும் தன்மை ஏற்ப்படும். கணவனின் குறிப்பறிந்து செயல்படும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் , கணவனின் சொல்படி அடங்கி நடக்கும் தன்மையும் , கணவனிடம்  நல்ல பாசமும் பற்றும் கொண்டவளாக இருப்பாள் . வருமுன் உணரும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும் . சமயோசித புத்திசாலித்தனம் கொண்டவளாகவும், சரியான நேரத்தில் கணவனுக்கு நல்ல யோசனை சொல்லும் புத்திசாலியாகவும் இருப்பாள் .

    2 ) ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகி கணவனின் மனம் அறிந்து செயல்படும் தன்மை வாய்க்கும் , தன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பிரயோகிக்கும் தன்மை ஏற்ப்படும் , இனிமையாக பேசி கணவனை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , பொருளாதார ரீதியாக கணவனுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை கூட ஜாதகி தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக காணப்படுவாள் , சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஜாதகிக்கு 
    அமைந்திருக்கும் , தனது கணவனின் வருமானம் அறிந்து சிக்கனமாக செலவு செய்பவளாக இருப்பாள், குடும்பத்தை அனுசரித்து செல்லும் தன்மை கொண்டவளாகவும் , எவ்வித சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாத குணம் கொண்டவளாக இருப்பாள் இதுவே இவர்களின் சிறப்பு அம்சம் .

    3 ) ஜாதகிக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம்  வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , சுக ஸ்தானம் எனும் நான்காம்  வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகி பெரியவர்கள் போற்றும் குணம் கொண்டவளாகவும் , கற்பு  நெறியில் சிறந்து விளங்குபவளாகவும் , சகல வசதிகளையும் , நிறைவான மனமும் , மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும் , சொத்து சுக சேர்க்கை கொண்டவளாகவும் இருப்பாள் , தன் கணவனின் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இழுக்கு வராத செய்கையை கொண்டவளாக இருப்பாள் , குழந்தைகளை பேணி பாதுகாக்கும் தன்மை கொண்டவளாகவும் அன்பால் குழந்தைகளை ஆதரிக்கும் தன்மை கொண்டவளாக காணப்படுவாள், அன்பை மட்டுமே மூலதனமாக கொண்ட பன்புடைய சிறந்த பெண்ணாக காணப்படுவாள் .

    4 ) ஜாதகிக்கு  பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் 
    மட்டுமே , பிறக்கும்  குழந்தை நிறைந்த யோக சாலியாக இருக்கும் , தனக்கு பிறக்கும் குழந்தை  பல உயரிய பண்புகளையும் , இறைநிலை அருளை எப்பொழுதும் தன்னகத்தே கொண்ட குழந்தையாகவும் இருக்கும் , ஜாதகிக்கு உதவி செய்ய உறவினர்கள் பலர் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள் , நல்ல குடும்பத்தை சார்ந்தவராக ஜாதகி இருப்பார் .

    5 ) களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு  எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது , அதாவது லக்கினம் 6 ,8 ,12 ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே கணவனுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும் தன்மை ஏற்ப்படும் , கணவன் செய்யும் தொழில் அதிக பங்களிப்பை செய்யும் குணமும் , கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும் , தன்னம்பிக்கை அளிப்பவளாகவும் ஜாதகி இருப்பார் , குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை உள்ளவராக இருப்பார் , கணவனின் ஒரு பாதியாக உணரும் தன்மை ஜாதகிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் . கணவனின் முன்னேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் பேரு பெற்றவர்கள் , களிமண்ணையும் சிலையாக மாற்றும் சக்தி படைத்தவர்கள் . சமுதாயத்தில் தனது கணவனை மிகசிரந்தவனாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள் .

    6 ) ஜாதகிக்கு  8 ம் வீடு  தனது கணவனின் உடல்நிலையையும் , மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை இந்த பாவக வழியில் இருந்தே செயல் படும் , ஒரு பெண்ணின் ஜாதகத்தில்  இந்த 8 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது  மிக முக்கியம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருவதே இந்த பாவகம் தான் , ஆண்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் அவர்களின்  உயிரை காப்பாற்றி வைப்பதே இந்த பாவகம் தான் என்பதைபெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் ஆண்கள் அனைவரும்  உணர வேண்டும் .

    7 ) ஜாதகிக்கு 12 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது  மிக முக்கியம் கணவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்  சந்தோஷங்களை தரும் அமைப்பு இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும் தன் கணவனுக்கு நல்ல மன நிம்மதியை எந்த சூழ்நிலையிலும் தரும் அமைப்பை பெற்றவளாக இருப்பாள்

    மேற்கண்ட ஸ்தானங்கள்  ஒரு ஜாதகிக்கு  நன்றாக இருக்கும் பட்சத்தில் , ஜாதகியை தனது மருமகளாக நிச்சயம் ஏற்றுகொள்ளலாம்திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள். ஜாதகி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து நிலைத்து நிற்கும்

    குறிப்பு

    ஆண்பெண் இருவரது ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தாலும்,  மேற்கண்ட அமைப்புகள் நன்றாக இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கை 100 சதவிகிதம் வெற்றி பெரும்மேலும் மேற்கண்ட பாவகங்கள் நன்றாக இருந்து நட்சத்திர பொருத்தம் ( ரஜ்ஜு பொருத்தம் உட்பட )  இல்லை என்றாலும் அவர்களுக்கு திருமணம்  செய்து வைத்தால் வாழ்க்கை 100 சதவீதம் நன்றாக இருக்கும்

    ராகு கேது , செவ்வாய் தோஷங்கள் என்பதெல்லாம் நடைமுறையில் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை என்பதே உண்மை , ஜோதிட அறிவு அற்ற ஜோதிடர்கள் வேண்டுமானால் இந்த தோஷங்களை பற்றி சொல்லி மக்களை குழப்பம் அடைய செய்யாலாம் , ஆனால் 

    ஜோதிட தீபத்திற்கு மக்கள் ஜோதிட ரீதியான விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது மட்டுமே முக்கிய நோக்கம் 

    Tirumaṇa vayatu vantavuṭaṉ taṉatu makaṉukkō allatu makaḷukkō evvita taṭaiyum illāmal tirumaṇam ciṟappāka amaintu, avarkaḷatu vāḻkkai 16 vakai celvamum peṟṟa niṟaivāṉa vāḻkkaiyāka amaiya vēṇṭum eṉpatu ovvoru peṟṟōriṉ kaṉavu, inta kaṉavu aṉaivarukkum palippatillai, peṟōrkaḷ taṉatu makaṉukkō allatu makaḷukkō vāḻkkai tuṇaiyai jātaka rītiyāka tērnteṭukkum poḻutu, naṭcattira poruttam eṉum oru amaippaiyum, cevvāy, rāku kētu eṉṟa amaippai maṭṭumē karuttil koṇṭu varaṉaiyō allatu vatuvaiyō tavaṟāka tērnteṭuppatu maṭṭumē itaṟkku mukkiya kāraṇam. Itaṟkku cariyāṉa tīrvu eṉṉa eṉpatai paṟṟi nām inta pativil kāṇpōm.

    Varaṉai (maṇamakaṉai) tērnteṭukkum poḻutu peṇṇiṉ peṟṟōrkaḷ, maṇamakaṉiṉ jātakattil kavaṉikka vēṇṭiya mukkiya amcaṅkaḷ:

    1) Jātakaṉukku lakkiṉam eṉum mutal vīṭu enta vitattilum pātikka paṭa kūṭātu, atāvatu lakkiṉam 6,8,12 m vīṭukaḷuṭaṉō allatu pātaka stāṉattuṭaṉō campantam peṟakkūṭātu lakkiṉam naṉṟāka iruntāl maṭṭumē jātakaṉ mikaciṟanta nalla kuṇaṅkaḷai peṟṟu iruppāṉ, mēlum uṭal nilai eppoḻutum naṉṟāka irukkum, tīya paḻakka vaḻakkaṅkaḷ aṟṟavaṉāka iruppāṉ, jātakaṉukku vāḻkkaiyil cuyamāka muṉṉēṟṟam perum amaippai tarum.

    2) Jātakaṉukku kuṭumpa stāṉam eṉum iraṇṭām vīṭu ekkāraṇattai koṇṭum pātikka paṭa kūṭātu, atāvatu lakkiṉam 6,8,12 m vīṭukaḷuṭaṉō allatu pātaka stāṉattuṭaṉō campantam peṟakkūṭātu, kuṭumpa stāṉam eṉum iraṇṭām vīṭu nalla nilaiyil iruntāl maṭṭumē jātakaṉukku nilaiyāṉa varumāṉam, iṉimaiyāka pēcum taṉmai, maṉaiviyai uyirukku uyirāka nēcikkum taṉmai, nalla pāramparya kuṭumpattai cārnta amaippu, maṉaiviyiṭam iṟutivarai aṉpu maṟṟum pācam vaikkum taṉmai eṉa jātakar pala ciṟappu amcaṅkaḷai koṇṭu iruppār.

    3) Jātakaṉukku pūrva puṇṇiyam stāṉam eṉum aintām vīṭu ekkāraṇattai koṇṭum pātikka paṭa kūṭātu, pūrva puṇṇiyam eṉum aintām vīṭu nalla nilaiyil iruntāl maṭṭumē jātakaṉukku taṉ kulam viḷaṅka puttiraṉ kiṭaippāṉ. Mēlum jātakaṉukku paratēṣa jīvaṉam amaiyātu. Ciṟu tuṉpam vantālum pala pēr utavi ceyvārkaḷ.

    (Cila pēr pūrva puṇṇiya stāṉattil rāku kētu amarntāl puttiraṉ illai eṉṟu colvārkaḷ, itu tavaṟāṉa karuttu riṣapam, mituṉam,kaṭakam,kaṉṉi, tulām,taṉucu,mīṉam ākiya rācikaḷ pūrva puṇṇiya stāṉamāka amaintu iṅku rāku kētu amarntāl pūrva puṇṇiya stāṉam 100 catavikitam naṉṟāka irukkum eṉpatai niṉaivil 
    koḷka.)

    4) Jātakaṉukku catturu stāṉam eṉum āṟām vīṭu nalla nilaiyil irukka vēṇṭum. Appaṭi nalla nilaiyil irukku amaippai peṟṟa jātakaṉ taṉatu maṉaiviyai enta nilaiyilum kaiviṭa māṭṭāṉ, mēlum vāḻkkaiyiṉ iṟutivarai tampatiyiṉar iruvarum iṇai piriyāta nilai tarum.

    5) Kaḷattira pāvakam eṉum ēḻām vīṭu enta vitattilum pātikka paṭa kūṭātu, atāvatu lakkiṉam 6,8,12 m vīṭukaḷuṭaṉō allatu pātaka stāṉattuṭaṉō campantam peṟakkūṭātu, inta kaḷattira pāvakam naṉṟāka iruntāl jātakarukku taṉatu maṉaivi taṉ uṭalil oru pāti eṉṟa eṇṇam eppoḻutum iruntukoṇṭē irukkum, maṟṟa peṇkaḷai taṉatu tāyākavum, cakōtariyākavum pāvikkum taṉmai uḷḷavarāka kāṇappaṭuvār, taṉatu vāḻkkai tuṇaikkāka aṉaittaiyum ēṟṟukkoḷḷum maṉōpakkuvam koṇṭavarāka iruppār, kaṇavaṉum maṉaiviyum aṉyōniyamāka kuṭumpam naṭattum taṉmai amaiyum, illaṟa vaḻakkai eppoḻutum makiḻcci poṅkum.

    6) Jīvaṉa stāṉam eṉum pattām vīṭu mikavum nalla nilaiyil irukka vēṇṭum appoḻututāṉ taṉatu maṉaiviyiṉ, aṉaittu ācaikaḷaiyum niṟaivēṟṟum tiṟaṉ jātakarukku ēṟppaṭum, tirumaṇattiṟku piṟaku viraivāṉa muṉṉēṟṟam peṟa inta jīvaṉa stāṉam mika naṉṟāka iruppatu mukkiyam, mēlum nirantara toḻil amaiyum nalla kuṇa iyalpai jātakar koṇṭiruppār.

    Mēṟkaṇṭa stāṉaṅkaḷ oru jātakaṉukku naṉṟāka irukkum paṭcattil, jātakaṉai 100 catavikitam nampi taṉatu makaḷai peṟṟōrkaḷ kaṉṉikā tāṉam ceytu vaikkalām, appaṭi ceytāl niccayam tirumaṇattiṟku piṟaku iruvarum vāḻaiyaṭi vāḻaiyāka vaḷamuṭaṉ vāḻntiruppārkaḷ.


    Vatuvai (maṇamakaḷai) tērnteṭukkum poḻutu piḷḷaiyiṉ peṟṟōrkaḷ, maṇamakaḷiṉ jātakattil kavaṉikka vēṇṭiya mukkiya amcaṅkaḷ:

    1) Jātakikku lakkiṉam eṉum mutal vīṭu enta vitattilum pātikka paṭa kūṭātu, atāvatu lakkiṉam 6,8,12 m vīṭukaḷuṭaṉō allatu pātaka stāṉattuṭaṉō campantam peṟakkūṭātu lakkiṉam naṉṟāka iruntāl maṭṭumē jātaki mikaciṟanta nalla kuṇaṅkaḷai peṟṟu iruppāḷ , mēlum uṭal nilai eppoḻutum naṉṟāka irukkum, maṟṟavarkaḷai aṉucarittu cellum taṉmai ēṟppaṭum. Kaṇavaṉiṉ kuṟippaṟintu ceyalpaṭum taṉmai jātakikku iyaṟkaiyilē amaintirukkum, kaṇavaṉiṉ colpaṭi aṭaṅki naṭakkum taṉmaiyum, kaṇavaṉiṭam nalla pācamum paṟṟum koṇṭavaḷāka iruppāḷ. Varumuṉ uṇarum taṉmai jātakikku iyaṟkaiyilē amaintirukkum. Camayōcita putticālittaṉam koṇṭavaḷākavum, cariyāṉa nērattil kaṇavaṉukku nalla yōcaṉai collum putticāliyākavum iruppāḷ.

    2) Jātakikku kuṭumpa stāṉam eṉum iraṇṭām vīṭu ekkāraṇattai koṇṭum pātikka paṭa kūṭātu, atāvatu lakkiṉam 6,8,12 m vīṭukaḷuṭaṉō allatu pātaka stāṉattuṭaṉō campantam peṟakkūṭātu, kuṭumpa stāṉam eṉum iraṇṭām vīṭu nalla nilaiyil iruntāl maṭṭumē jātaki kaṇavaṉiṉ maṉam aṟintu ceyalpaṭum taṉmai vāykkum, taṉ pēcum ovvoru vārttaiyum kavaṉamāka pirayōkikkum taṉmai ēṟppaṭum, iṉimaiyāka pēci kaṇavaṉai eppoḻutum cantōṣamāka vaittirukkum taṉmai ēṟppaṭum, poruḷātāra rītiyāka kaṇavaṉukku ēṟppaṭum piraccaṉaikaḷai kūṭa jātaki tīrttu vaikkum āṟṟal peṟṟavaḷāka kāṇappaṭuvāḷ, cēmikkum paḻakkam ciṟu vayatu mutalē jātakikku 
    amaintirukkum, taṉatu kaṇavaṉiṉ varumāṉam aṟintu cikkaṉamāka celavu ceypavaḷāka iruppāḷ, kuṭumpattai aṉucarittu cellum taṉmai koṇṭavaḷākavum, evvita cūḻnilaiyilum taṉatu kaṇavaṉai viṭṭu piriyāta kuṇam koṇṭavaḷāka iruppāḷ ituvē ivarkaḷiṉ ciṟappu amcam.

    3) Jātakikku cuka stāṉam eṉum nāṉkām vīṭu ekkāraṇattai koṇṭum pātikka paṭa kūṭātu, cuka stāṉam eṉum nāṉkām vīṭu nalla nilaiyil iruntāl jātaki periyavarkaḷ pōṟṟum kuṇam koṇṭavaḷākavum, kaṟpu neṟiyil ciṟantu viḷaṅkupavaḷākavum, cakala vacatikaḷaiyum, niṟaivāṉa maṉamum, maṟṟavarkku utavum maṉappāṉmaiyum, cottu cuka cērkkai koṇṭavaḷākavum iruppāḷ, taṉ kaṇavaṉiṉ matippiṟkum kauravattiṟkum iḻukku varāta ceykaiyai koṇṭavaḷāka iruppāḷ, kuḻantaikaḷai pēṇi pātukākkum taṉmai koṇṭavaḷākavum aṉpāl kuḻantaikaḷai ātarikkum taṉmai koṇṭavaḷāka kāṇappaṭuvāḷ, aṉpai maṭṭumē mūlataṉamāka koṇṭa paṉpuṭaiya ciṟanta peṇṇāka kāṇappaṭuvāḷ.

    4) Jātakikku pūrva puṇṇiyam stāṉam eṉum aintām vīṭu ekkāraṇattai koṇṭum pātikka paṭa kūṭātu, pūrva puṇṇiyam eṉum aintām vīṭu nalla nilaiyil iruntāl 
    maṭṭumē, piṟakkum kuḻantai niṟainta yōka cāliyāka irukkum, taṉakku piṟakkum kuḻantai pala uyariya paṇpukaḷaiyum, iṟainilai aruḷai eppoḻutum taṉṉakattē koṇṭa kuḻantaiyākavum irukkum, jātakikku utavi ceyya uṟaviṉarkaḷ palar eppoḻutum tayārāka iruppārkaḷ, nalla kuṭumpattai cārntavarāka jātaki iruppār.

    5) Kaḷattira pāvakam eṉum ēḻām vīṭu enta vitattilum pātikka paṭa kūṭātu, atāvatu lakkiṉam 6,8,12 m vīṭukaḷuṭaṉō allatu pātaka stāṉattuṭaṉō campantam peṟakkūṭātu, inta kaḷattira pāvakam naṉṟāka iruntāl maṭṭumē kaṇavaṉuṭaṉ eppoḻutum cērntirukkum taṉmai ēṟppaṭum, kaṇavaṉ ceyyum toḻil atika paṅkaḷippai ceyyum kuṇamum, kaṇavaṉukku eppoḻutum uṟutuṇaiyākavum, taṉṉampikkai aḷippavaḷākavum jātaki iruppār, kuṭumpa vāḻkkaiyil oruvarukku oruvar viṭṭu koṭukkum maṉappāṉmai uḷḷavarāka iruppār, kaṇavaṉiṉ oru pātiyāka uṇarum taṉmai jātakikku eppoḻutum iruntu koṇṭē irukkum. Kaṇavaṉiṉ muṉṉēṟṟattil atika paṅku vakikkum pēru peṟṟavarkaḷ, kaḷimaṇṇaiyum cilaiyāka māṟṟum cakti paṭaittavarkaḷ. Camutāyattil taṉatu kaṇavaṉai mikacirantavaṉāka māṟṟum āṟṟal koṇṭavarkaḷ.

    6) Jātakikku 8 m vīṭu taṉatu kaṇavaṉiṉ uṭalnilaiyaiyum, maṉa nilaiyaiyum ārōkkiyamāka vaittirukkum taṉmai inta pāvaka vaḻiyil iruntē ceyal paṭum, oru peṇṇiṉ jātakattil inta 8 m vīṭu 100 catavikitam naṉṟāka iruppatu mika mukkiyam kaṇavaṉukku nīṇṭa āyuḷai taruvatē inta pāvakam tāṉ, āṇkaḷ evvaḷavu pāvam ceytālum avarkaḷiṉ uyirai kāppāṟṟi vaippatē inta pāvakam tāṉ eṉpatai, peṇkaḷukku tuṉpam viḷaivikkum āṇkaḷ aṉaivarum uṇara vēṇṭum.

    7) Jātakikku 12 m vīṭu 100 catavikitam naṉṟāka iruppatu mika mukkiyam kaṇavaṉukku uṭal rītiyākavum maṉa rītiyākavum cantōṣaṅkaḷai tarum amaippu inta pāvaka vaḻiyil iruntē ceyalpaṭum taṉ kaṇavaṉukku nalla maṉa nim'matiyai enta cūḻnilaiyilum tarum amaippai peṟṟavaḷāka iruppāḷ. 

    Mēṟkaṇṭa stāṉaṅkaḷ oru jātakikku naṉṟāka irukkum paṭcattil, jātakiyai taṉatu marumakaḷāka niccayam ēṟṟukoḷḷalām. Tirumaṇattiṟku piṟaku iruvarum vāḻaiyaṭi vāḻaiyāka vaḷamuṭaṉ vāḻntiruppārkaḷ. Jātaki kālaṭi eṭuttu vaikkum iṭattil aṉaittu celva vaḷaṅkaḷum niṟaintu nilaittu niṟkum. 

    Kuṟippu: 

    Āṇpeṇ iruvaratu jātakattil naṭcattira poruttam 10 kku 10 amaintālum, mēṟkaṇṭa amaippukaḷ naṉṟāka iruntāl maṭṭumē tirumaṇa vāḻkkai 100 catavikitam veṟṟi perum, mēlum mēṟkaṇṭa pāvakaṅkaḷ naṉṟāka iruntu naṭcattira poruttam (rajju poruttam uṭpaṭa) illai eṉṟālum avarkaḷukku tirumaṇam ceytu vaittāl vāḻkkai 100 catavītam naṉṟāka irukkum. 

    Rāku kētu, cevvāy tōṣaṅkaḷ eṉpatellām naṭaimuṟaiyil vāḻkkaiyil evvita pātippaiyum taruvatillai eṉpatē uṇmai, jōtiṭa aṟivu aṟṟa jōtiṭarkaḷ vēṇṭumāṉāl inta tōṣaṅkaḷai paṟṟi colli makkaḷai kuḻappam aṭaiya ceyyālām, āṉāl 

    jōtiṭa tīpattiṟku makkaḷ jōtiṭa rītiyāṉa viḻippuṇarvu peṟa vēṇṭum eṉpatu maṭṭumē mukkiya nōkkam

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728