ரிசப ராசியில் பிறந்தவர்கள்
கிருத்திகை - 2,3,4 ம் பாதம், ரோகினி மற்றும் மிருகசீரிசம் - 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்கள்
பருத்த உடலும் , கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் மெதுவாக செயல்களை செய்பவர்கள்.கல்வி மற்றும் கணிதங்களில் ஓரளவு புலன்மையுடனும் , தெய்வ நம்பிக்கை கொண்ட இவர்கள் ஆடை,ஆபரணங்க்ள், நகைகள், செல்வம் முதலியவற்றை பெற்றிருப்பார்கள்.
வேடிக்கையாக பேசும் இவர்கள் குழந்தைகளிடம் அன்பு கொண்டவர்கள். தாங்கள் தாராளமாக செலவு செய்யாமல், பிறரை செய்யும்படி சொல்லி, அதனால் பலன் அடைவார்கள். 80 வயது வரை சுகங்களுடனும் இருப்பார்கள்.
சுக்கிரன் -
கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூர், ஆங்கிலத்தில் வீனூஸ் என்றும் தமிழில் சுக்கிரன்(வெள்ளி) என்றும் அழைக்கப்படும் கிரகம் தொடர்புடைய மதுரை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற ஒரு சிவஸ்தலமாகும். இத்தலம் திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது. இத்தலம் அக்னிஸ்தலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் அழைக்கப் படுகிறது. சிவ பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக ஐதீகம். தங்களின் துனைவிமார்களின் நலம் நாடி பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுக்ரா அல்லது வீனஸ் என்னும் இந்த கிரகம் நல்ல கல்வி அறிவுடன், வளமான சுகமான வாழ்க்கையையும், வம்சாவழியையும், நீண்ட ஆயுளையும், செல்வ சம்பத்துக்களையும் வழங்கக்கூடியவர் ஆவார். இக்கிரகத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார்.
2.jpg)
No comments