பணவரவை அதிகபடுத்துவது எப்படி..??? [ஜோதிடசாஸ்திரத்தின் உதவியால்]
பணவரவை அதிகபடுத்துவது எப்படி..??? [ஜோதிடசாஸ்திரத்தின் உதவியால்]
எவ்வாறு பணவரவை உருவாக்குவது மற்றும் அதிகபடுத்துவது என்பது தொடர்பான விதிகளை பார்க்கலாம்..,
இந்த பதிவு பணவரவு குறைவாக இருப்பவர்களும்,பணத்தட்டுப்பாடு உள்ளவர்களும் பயன்பெறும் விதத்தில் பணவரவு தொடர்பாக அவர்களுக்கான ஒரு தீர்வை கொடுக்கும் என்பது உறுதி.
ஜோதிடசாஸ்திரப்படி சில கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்களுக்கு பணத்தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.அவர்கள் பின்வரும் குறிப்புகளை உபயோகபடுத்தி நிம்மதியுடன் வாழலாம்.கிரக அமைப்புகள் பின்வருமாறு..,
1.ஜாதகப்படி இரண்டாம் வீட்டின் அதிபதி ராசி/அம்சத்தில் நீச்சம் பெற்று வலுவிழந்து இருந்தால் அவர்களுக்கு பணத்தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.
2.இரண்டாம் வீட்டின் அதிபதி ராகு/கேது வுடன் தொடர்பு பெற்று குருபார்வை இல்லாமல் இருப்பதும் பணத்தட்டுப்பாடை ஏற்படுத்தும்.
3. இரண்டாம் வீட்டின் அதிபதி 6,8,12 போன்ற இடங்களில் மறைந்து குருபார்வை இல்லாமல் இருப்பது பணவரவில் தடையை உண்டாக்கும்.
4.இரண்டாமிடத்தில் ராகு/கேது சனி போன்ற கிரகங்கள் அமர்ந்து இரண்டாம் வீட்டின் அதிபதியும் பலமிழந்து இருப்பது மோசமான ஒரு அமைப்பாகும்.
5.ஜாதகப்படி உங்களுக்கு தீமை செய்யகூடிய கிரகங்களின்/பாவிகளின் திசாபுத்தி காலங்கள் நடைபெறுமானால் உங்களுடைய ஜாதகத்தில் யோகங்கள் குவிந்திருந்தாலும் அது இந்தகாலகட்டத்தில் வேலைசெய்யாமல் பணதட்டுபாடை ஏற்படுத்திவிடும்.
மேற்கண்ட கிரகஅமைப்புகளை கொண்ட ஜாதகர்கள் சில வழிபாட்டுகளை செய்வதன் மூலம் அவர்கள் அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அவர்களின் தொழில்/வேலை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
ஜோதிடசாஸ்திரத்தின் உதவியால் அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான அளவு பணவரவை எவ்வாறு உருவாக்குவது..????
பொதுவாக ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடத்தின் அதிபதி பலமிழந்து இருப்பது பணவரவில் தடையை உண்டுபண்ணும்.எனவே அந்த கிரகத்தை சில வழிபாடுகள் மூலம் கட்டாயம் பலபடுத்த வேண்டும்.
“”””””””உங்கள் ஜாதகப்படி இரண்டாம் வீட்டின் அதிபதி எந்தகிரகம் உள்ளது என்பதை பார்த்து அதற்குண்டான ரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்துகொண்ட பின்பு அந்த கிரகத்திற்குரிய யந்திரத்தை வைத்து தினசரி 10 நிமிடம் மந்திரம் சொல்லி பூஜை செய்தால் போதும்.உங்களுடைய அடிப்படை வாழ்கைக்கு தேவையான பணவரவு சீராக இருக்கும் நிம்மதி பிறக்கும்.””””””””
உதாரணம்:
மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவர் ஜாதகத்தில் ரசிகட்டத்தில் இரண்டாம்வீட்டின் அதிபதியான சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று இரண்டாம் இடத்தில் சனி,ராகு/கேது போன்ற கிரகங்கள் இருந்தால் அவருக்கு பணவரவு இருந்துகொண்டே இருக்கும் ஆனால் அந்தபணம் முழுவதும் மிச்சம் இல்லாமல் விரயமாகிகொண்டே இருக்கும்.
அவருக்கு கொடுக்கல்/வாங்கல் மூலம் நஷ்டளே ஏற்படும் சுக்கிர திசை நடைபெறும்போது குடும்பவாழ்கையில் சில பதிப்புகளையும் ஏற்படுத்தும்.மேற்படி அவருக்கு யோகமான திசாபுத்தி காலங்கள் நடைபெறும் போதும் அவருக்கு பணம் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும்.
தீர்வு:
1.அவர் மறந்தும்கூட சுக்கிரனுக்குண்டான ரத்தினத்தை அணிந்துவிடக்கூடது.12ம் இடத்தில் அமர்ந்த சுக்கிரனுகுண்டான ரத்தினத்தை அணிவதன் மூலம் பணவரவிற்கு பதில் பணவிரயம் மிகமிக அதிகமாகும்..
2.சுக்கிரபகவான் யந்திரத்தை வைத்து சுக்கிரகாயத்ரி உச்சரித்து பூஜை செய்துவர செலவுகள் மட்டுப்படும் சேமிப்பு அதிகரிக்கும்.
3.சுக்கிரனுக்கு உரிய சமித்து(அத்திமரவேர்/பட்டை அல்லது இலை) போன்றவற்றில் எதாவது ஒன்றை உங்களுடைய பணம் புழங்கும் அலமாரியிலோ பார்சிலோ பாக்கெட்டிலோ வைத்துகொண்டால் போதும்.பணவரவு தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கும்.
4.வெள்ளிகிழமை தோறும் அசைவம் தவிர்த்து விரதம் இருந்து மஹாலக்ஷ்மியை வழிபடலாம்.
குறிப்பு: மேற்கண்ட குறிப்புகளை படித்தபின் முறையான அனுபவமுள்ள ஜோதிடர்களின் வழிகாட்டுதலோடு மட்டுமே உங்களுக்கான பரிகாரங்களையும் பணவரவு தொடர்பான தீர்வுகளையும் அறிந்துகொண்டு செயல்படுத்தவேண்டும். முறையான வழிகாட்டுதல் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அது பலனளிக்காமல் போவதைவிட சில பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

No comments