சொந்த வீடு கட்டும் யோகம் யாருக்கு..???
சொந்த வீடு கட்டும் யோகம் யாருக்கு..???
ஒரு ஜாதகத்தில் சொந்தவீடு/சொந்தஊர்/தாய்வழி உறவுகள் ஆகியவற்றை குறிக்கும் இடம் நான்காம் பாவம் ஆகும்..இந்த ஸ்தானத்திற்கு உரிய கிரகத்தின் தன்மையையும்/நிலையையும் வைத்து ஒருவருக்கு அமையும் வீட்டின் அளவையும் அந்தவீடு அவர் வாழ்நாள் முழுவதும் நிலைக்குமா என்பதை பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
இனி விஷயத்திற்கு வருவோம்..,அவரவர் உங்கள் ஜாதகத்தில் பின்வரும் சில கிரக அமைப்புகளை ஒப்பிட்டு பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..
கிரக அமைப்புகள்:
1.ஜாதகத்தின் ராசிகட்டத்தில் நான்காம் வீட்டின் அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று அந்த கிரகத்தின் திசை நடைபெற்றால் கட்டாயம் சொந்தவீடு கட்டி அதில் வசிக்கக்கூடிய யோகம் கிட்டும் ஆனால் அந்த வீடு லக்னத்திற்கு 6,8,12 ஆக இருக்ககூடாது.
2.நான்காம் வீட்டில் நல்ல ஆதிபத்தியம் கொண்ட சுக்கிரபகவான் திக்பலம் பெற்றிருப்பது ஒரு சிறந்த அமைப்பு.இந்த திசை நடப்பில் வரும்போது சுயபுத்தி முடிந்து நான்காம்வீட்டின் அதிபதியுடைய புத்தி நடைமுறைக்கு வரும்போது கட்டாயம் வீடுகட்டுதல் சம்பந்தமான காரியங்களை நடத்தும் யோகம் உண்டாகும்.
3.நான்காம் வீட்டின் அதிபதி லக்னத்திற்கு கேந்திரம்/திரிகோணம் ஏறி பலமுடன் நின்று உடன் சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றாலும் வீடுகட்டும் யோகம் வாய்க்கும்.
4. நான்காம் வீட்டில் ராகுபகவான் இருந்தாலும் தீய கிரகசேர்க்கையின்றி அமைந்த ராகுவிற்கு இடம் கொடுத்த கிரகம் ஆட்சி/உச்சம் அடைந்து திசை நடைபெற்றால் சொந்தவீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.
5.லக்னத்திற்கு ஐந்தாம்வீட்டின் அதிபதி கேந்திரம் ஏறி பலமுடன் நின்று திசை நடைபெற்றால் சொந்தவீட்டில் அல்லது பூர்விக வீட்டில் சில திருத்தம் செய்யும் யோகம் உண்டாகும்.
6.லக்னாதிபதி நான்காம் வீட்டில் பலமுடன் நின்று சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றால் வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.ஆனால் அந்த கிரகம் கரகோபாவநாஸ்தி அடையாமல் இருக்கவேண்டும்.
7.பத்தாம் வீட்டிற்குரிய கிரகமும் நான்காம் வீட்டிற்குரிய கிரகமும் இனைந்து கேந்திரத்தில் பலமுடன் நின்று திசை நடைபெற்றால் ஏராளமான வீடுகளை கட்டி விற்பனை செய்யும் யோகம் உண்டாகும்.
8.லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு உரிய கிரகம் இரண்டாம் வீட்டில் அமர்ந்து சுபகிரகபார்வை பெற்று திசைநடைபெறும்போது சொந்தவீடு கட்டும் யோகம் உண்டாகும்.உடன் எத்தனை கிரகம் சேர்க்கை பெற்றுள்ளதோ அத்தனை வீடுகள் அமையும்.
9.நான்காம் வீட்டில் செவ்வாய் பலமுடன் நின்று சுபகிரகபார்வை பெற்று திசை நடைபெறும்போது கட்டாயம் வீடுகட்டும் அல்லது நிலம் வாங்கும் பூமிபாக்யம் உண்டாகும்.
10.லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் திசை ஆட்சி/உச்ச பலத்துடன் நடைபெறும்போதும் சொந்தவீடு கட்டி மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கைஅமைப்பு உண்டாகும்.
11.நான்காம் வீட்டில் வளர்பிறை சந்திரன் அமர்ந்து சுபகிரகபார்வை பெற்று திசை நடைபெறும்போது ஜாதகரின் தாய்வழியில் உதவிகள் கிடைத்து சொந்தவீடு கட்டுவதற்கான யோகம் உண்டாகும்.
மேற்கண்ட கிரகஅமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்தி நடைமுறைக்கு வந்தால் மட்டுமே யோகங்கள் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட கிரக அமைப்புகளை தவிர சொந்தவீடு தொடர்பான மேலும் நிறைய கிரகஅமைப்புகள் ஜோதிட ரீதியாக உள்ளன.பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திகொள்கிறேன்.

No comments