பிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி
பிறந்ததேதி யை வைத்துதான் பெரும்பாலும் ராசி எண்போன்றவற்றை கணிக்கிறோம்,பார்க்கிறோம்...பிறந்ததேதியின்கூட்டுஎண்கள் எந்தளவு வேலை செய்கின்றன...அதன் பலன்கள்என்ன என்று பார்ப்போம்,
பிறந்ததேதி எண் ஒருவரது குணத்தையும் செயல்பாட்டையும்குறிக்கிறது.ஒருவரது பிறந்ததேதி 5 என்றால் (5,14,23)அவர்வேல்கமும்,டென்சனும் நிரைந்தவர்..நிறைய பேசுவார்.நிறையவிசய ஞானமும் இருக்கும்.பதட்டம் அதிகமுண்டு.ஒரு இடத்தில்ரொம்ப நேரம் இருக்கமாட்டார்.புதிதாக எதையாவது செய்யமுயற்சித்துக்கொண்டே இருப்பார்.மற்றவர்களை கவரமுயற்சிப்பார்.இவரது வரவை விட செலவுகளெ அதிகம்காணப்படும்.
இவரது பிறந்த தேதி கூட்டு எண்;1,5,6,9 போன்ற வலுவானஎண்களாக இருப்பின் நிலையான வெற்றியைபெறக்கூடியவராகவும்,நிறைய சம்பாதிக்க கூடியவராகவும்இருப்பார்.எதிலும் வெற்றி பெறுவார்.இதுவே வலுவில்லாதஎண்களாக இருப்பின்,2,3,4,7,8 வாழ்வின் பிற்பகுதி மிகவும்போராட்டம் நிறைந்ததாக காணப்படும்.இந்த எண் குறிக்கும்ஆண்டுகளில் மிக கஷ்டமும்,தோல்வியும் உண்டாக்கும்.
2 ஆம் என் ஆதிக்கத்தில் பிறந்து கூட்டு எண் 8,9 என வந்தால்அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.பெரும்பாலும்நோயாளிகளாகவே காணப்படுகிறார்கள்.வீண்வம்பு,வழக்குகளில் சிக்கி கொள்பவர்களாகஇருக்கிறார்கள்.குடும்ப வாழ்வு போராட்டம் மிக்கதாகஇருக்கிறது.
பிறந்த தேதி 4 ம் கூட்டு எண் 2,4,7,8 என அமைந்தால் கடன்பிரச்சனை,நண்பர்களால் நஷ்டம் என ஏற்படுகிறது....
கூட்டு எண் 7 வருபவர்கள் மன்மத ராஜாக்களாக பலரைபார்த்திருக்கிரேன்.கூட்டு எண் 4 ,8 பெரிய கடன் பிரச்சனைகளில்சிக்கி துன்பப்படுபவர்களை பார்த்திருக்கிறேன்.கூட்டு எண் 7கலைத்துறையில் நல்ல வெற்றி தரும்.கூட்டு எண் 2குழப்பமான வாழ்வையே தருகிறது.கூட்டு எண் 8 போராட்டம்,தடங்கல்,தாமதம் என துன்புறுத்துவதாகசொல்லியிருக்கிறார்கள்.
No comments