மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சில சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சில சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். மூலம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேதுபகவான்ஆவார். கேதுவின் அதிதேவதை விநாயகர் என்பதால் உங்களின் இஷ்டதெய்வமாக விநாயகரை வணங்கிவர பலயோகபலன் உண்டாகும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பிள்ளையார்பட்டி சென்றுவழிபடுவது சிறப்பைத்தரும். ஸ்ரீராம மந்திரத்தையே சுவாசமாககொண்ட ஸ்ரீஆஞ்சநேயர் அவதரித்தது மார்கழி மூலநட்சத்திரத்தில் தான். ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபடுவது பிறவிதுன்பம் தீர்க்கும்.
.
உங்கள் நட்சத்திரத்தில் பிறந்தநாயன்மார்கள். 1.திருஞானசம்பந்தர் 2. திருநீலக்க நாயனார். 3.திருநீலகண்டயாழ்ப்பானர் 4.முருகநாயனார் 5.மூர்க்கநாயனார் 6.குங்குலிங்கநாயனார் 7.ஐடிகள் கடவார்கோன்நயனார். ஆவார்கள் பெரியபுராணம் நூல் வாங்கி இந்த நாயன்மார்கள் வரலாறைத் தெரிந்துகொண்டு அவர்கள் செய்தபக்தியையும் தர்மகாரியங்களையும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து காலையில் எழுந்தவுடன் அவர்கள் திருநாமத்தை மனதில் நினைத்து வாழ்ந்து வந்தால் எந்ததுன்பமும் உங்களை நெருங்காது. வாழ்க்கையில் சீரான முன்னேற்றமும் அடைவீர்கள். சப்தரிஷிகளின் கோத்திரத்தில் உங்கள் நட்சதிரத்திற்குரிய கோத்திரம் புலஸ்தி ஆவார். கோவிலில் அர்ச்சனை செய்யும் போது ராசி நட்சத்திரம் கோத்திரம் கூறி அர்ச்சனை செய்யுங்கள்.
பஞ்சபட்சி சாஸ்திரப்படி உங்கள் நட்சத்திரத்திற்குரிய பட்சி கோழியாகும். நட்புபட்சி மயிலாகும். பகைபட்சி வல்லூறு ஆகும். சமபட்சிகள் காகம் மற்றும் ஆந்தையாகும். திருமணத்தின் போது பகைபட்சியை இணைக்கக்கூடாது என பஞ்சபட்சி சாஸ்திரம் கூறுகிறது. இன்றும் கிராமபுரங்களில் உள்ள ஜோதிடர்கள் கடைபிடிக்கவும் செய்கிறோம். திருமணத்தின் போது பகைபட்சியை தவிர்க்கவும். மூலம் நட்சத்திரத்திற்குரியமரம் மராமரமாகும். வீட்டில் மரம் வளர்க்க வசதி இருந்தால் ஒருமரமாவது வளர்த்துவாருங்கள் உங்களுக்கு விவசாயநிலம் இருந்தால் இருமரம் வளர்த்துவாருங்கள். ஆண்டுக்கு ஒருமுறை கணபதிகோமம் செய்யும்பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். கணபதிகோமம் பண்ணும் போது மராமரக்குச்சிகளையும் சமித்தாகப் பயன்படுத்துவது மிகவும் சிறப்பாக அமையும். கோமம் செய்பவர்களிடம் முதலிலே சொல்லிவிட்டால் மராமரகுச்சி அவர்களே தயார்செய்துகொள்வார்கள். 27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகள் சிலநர்சரிகளில் இப்போது தயார்செய்கிறார்கள். அவர்களிடம் வாங்கி மரம் வளர்த்து பயன்பெறுங்கள். தென்னாடுடையசிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி......
No comments