Header Ads

  • Breaking News

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 8 PART III

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 8



    என்ன நவாம்சம் எப்படி போடுவது என்று தெரிந்து கொண்டீர்களா ? மேலே சொன்ன விஷயத்தைக் கொண்டு நவாம்சம் கணித்தால் அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.



    இப்போது நவாம்சம் போடக் கற்றுக் கொண்டீர்கள். இன்னும் ஜனன கால இருப்பு திசை போடவேண்டும். போட்டுவிடால் ஜாதகக் கணிதம் முடிந்து விட்டது. அப்புறம் பலன் தான் சொல்லவேண்டும்.

    நாம் திருக் கணிதப்படி ஜாதகம் கணித்து விட்டோம். சிலர் வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி எப்படி நவாம்சம் போடுவது எனக் கேட்க்கலாம். பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 9-ம் பக்கத்தைப் பாருங்கள். நமக்கு வேண்டியது ஆடி 30-ம் தேதிக்கு உதயாதி நாழிகை 27-25க்கு கிரக நிலைகள். சூரியனின் சாரம் என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.

    சூரியன் ஆடி 28-ம் தேதி 34-03க்கே ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு வந்து ஆவணி 1-ம் தேதி 03-00 நாழிகை முடிய அங்கே இருக்கிறார். அம்ச இலக்கினம் மீனம் என்று பஞ்சாங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். ஆக சூரியனை அம்சத்தில் மீனத்தில் போடுங்கள்.

    அடுத்தது செவ்வாய். ஆடி 22 முதல் ஆவணி 1-ம் தேதி முடிய மூலம் 1-ல் இருக்கிறார். நவாம்சம் மேஷம் எனப் போட்டு இருக்கிறார்கள். மேஷத்தில் செவ்வாயைப் போடுங்கள். இவ்வாறே ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மறுபடியும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728