Header Ads

  • Breaking News

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 8 PART - II

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 8



    நாம் இலக்கினம் மகரம் எனப் போட்டிருந்தோம். அதாவது உதயாதி நாழிகை 26-51-ல் இருந்து 31-36 முடிய மகர இலக்கினம். இந்த இடைப்பட்ட காலமான 4 நாழிகை 45 வினாழிகையில் மகர இலக்கினம் வருகிறது. இந்த 4 நாழிகை 45 வினாழிகை ஒன்பது நட்சத்திரப் பாதங்களைக் கொண்டது அல்லவா? அப்படியானால் ஒரு நட்சத்திரப்பாதத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

    நாலு நாழிகை 45 வினாழிகையைநாழிகை ஆக்குங்கள். 285 வினாழிகை வரும். இதை ஒன்பதால் வகுங்கள். 285 / 9 = 32 நாழிகை சுமாராக. அப்படியனால் 9 பாதங்களும் எவ்வளவு நேரத்தில், எப்படி கடக்கப் படுகின்றன வென்று கீழே பாருங்கள்.

    மகரத்தில் உத்திராடம் 2, 3, 4, பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4, பாதங்கள், அவிட்டம் 1, 2 பாதங்கள். மொத்தம் 9 பாதங்கள். இந்த 9 பாதங்களும் கீழ்க்கண்டவாறு கடக்கப் படுகின்றன.

    மகர இலக்கினம் (சென்ற பாடத்தைப் பாருங்கள்) ஆரம்பம் :26.51 நாழிகை
    உத்திராடம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    உத்திராடம் 3-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    உத்திராடம் 4-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    திருவோணம் 1-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    திருவோணம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    திருவோணம் 3-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    திருவோணம் 4-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    அவிட்டம் 1-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
    அவிட்டம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
     31.40


    அன்று குழந்தை பிறந்த நேரம் 27 நாழிகை 25 வினாழிகை. அது உத்திராடம் 3-ம் பாதத்தில் வருகிறது. ஆகவே இலக்கினத்தின் நட்சத்திரப்பாதம் உத்திரடம் 3-ம் பாதமாகும். இப்போது இலக்கினம் மற்றும் 9 கிரகங்களின் நட்சத்திரப் பாதம் கண்டுபிடிக்கும் முறையைத் தெரிந்து கொண்டீர்கள். நட்சத்திரப் பாதத்தைக் கீழ்க் கண்டவாறு அட்டவணைப் படுத்துங்கள். அது நவாம்சம் போட உபயோகமாக இருக்கும்.

    கிரகங்கள்நட்சத்திரம்பாதம்.
    இலக்கினம்உத்திராடம்3-ம் பாதம்
    சூரியன்ஆயில்யம்4-ம் பாதம்
    சந்திரன்மிருகசீரிஷம்1-ம் பாதம்
    செவ்வாய்கேட்டை3-ம் பாதம்
    புதன்மகம்2-ம் பாதம்
    குருதிருவாதரை2-ம் பாதம்
    சுக்கிரன்புனர்ப்பூசம்1-ம் பாதம்
    சனிரோகிணி3-ம் பாதம்
    ராகுதிருவாதிரை1-ம் பாதம்
    கேதுமூலம்3-ம் பாதம்


    நவாம்சம் போடும் முறை

    முதலில் 27-நட்சத்திரங்களையும் கீழ்க்கண்டவாறு 3- பகுதியாக எழுதிக் கொள்ளுங்கள். இந்த மாதிரியாகப் பிரித்து எழுதுவது மிக முக்கியம்.

    123
    அஸ்வினிமகம்மூலம்
    பரணிபூரம்பூராடம்
    கார்த்திகைஉத்திரம்உத்திராடம்
    ரோகிணிஹஸ்தம்திருவோணம்
    மிருகசீரிஷம்சித்திரைஅவிட்டம்
    திருவாதிரைஸ்வாதிசதயம்
    புனர்ப்பூசம்விசாகம்பூரட்டாதி
    பூசம்அனுஷம்உத்திரட்டாதி
    ஆயில்யம்கேட்டைரேவதி


    27-நட்சத்திரங்களையும் 3 பகுதிகளாகப் பிரித்து எழுதி இருக்கிறோம். முதல் 9-நட்சத்திரங்களான அஸ்வனி முதல் ஆயில்யம் வரை முதல் 4 ராசிகளில் அடக்கம். அடுத்த 9 நட்சத்திரங்களான மகம் முதல் கேட்டை வரை சிம்மம் முதல் விருச்சிகம் உள்ள 4 ராசிகளில் அடக்கம். கடைசி 9 நட்சத்திரங்களான மூலம் முதல் ரேவதி முடிய தனுசு முதல் மேஷம் முடிய அடக்கம்.

    எந்த ஒரு கிரகமாவது அஸ்வனி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்தில் இருந்தால் நவாம்சத்தில் மேஷத்தில் போடுங்கள்.
    2-ம் பாதத்தில் இருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
    3-ம் பாதத்தில் இருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
    4-ம் பாதத்தில் இருந்தால் கடகத்தில் போடுங்கள்.

    எந்த கிரகமாவது பரணி, பூரம், பூராடத்தில் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
    2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
    3-ம் பாதத்தில் இருந்தால் துலாமில் போடுங்கள்.
    4-ம் பாதத்தில் இருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

    எந்த கிரகமாவது கார்த்திகை, உத்திரம், உத்திராடமில் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்திலிருந்தால் தனுசில் போடுங்கள்.
    2-ம் பாதத்திலிருந்தால் மகரத்தில் போடுங்கள்.
    3-ம் பாதத்தில் இருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
    4-ம் பாதத்திலிருந்தால் மீனத்தில் போடுங்கள்.

    எந்த கிரகமாவது ரோகிணி, ஹஸ்தம், திருவோணத்தில் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்திலிருந்தால் மேஷத்தில் போடுங்கள்.
    2-ம் பாதத்திலிருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
    3-ம் பாதத்திலிருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
    4-ம் பாதத்திலிருந்தால் கடகத்த்¢ல் போடுங்கள்.

    எந்த கிரகமாவது மிருகசீரிஷம், சித்தரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
    2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
    3-ம் பாதத்திலிருந்தால் துலாமில் போடுங்கள்.
    4-ம் பாதத்திலிருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

    எந்த கிரகமாவது திருவாதரை, ஸ்வாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்தில் இருந்தால் தனுசில் போடுங்கள்.
    2-ம் பாதத்திலிருந்தல் மகரத்தில் போடுங்கள்.
    3-ம் பாதத்திலிருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
    4-ம் பாதத்தில் இருந்தால் மீனத்தில் போடுங்கள்.

    எந்த கிரகமாவது புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்தில் இருந்தால் மேஷத்தில் போடுங்கள்.
    2-ம் பாதத்திலிருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
    3-ம் பாதத்திலிருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
    4-ம் பாதத்தில் இருந்தால் கடகத்தில் போடுங்கள்.

    எந்த கிரகமாவது பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
    2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
    3-ம் பாதத்தில் இருந்தால் துலாமில் போடுங்கள்.
    4-ம் பாதத்தில் இருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

    எந்த கிரகமாவது ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

    1-ம் பாதத்தில் இருந்தால் தனுசில் போடுங்கள்.
    2-ம் பாதத்தில் இருந்தால் மகரத்தில் போடுங்கள்.
    3-ம் பாதத்தில் இருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
    4-ம் பாதத்தில் இருந்தால் மீனத்தில் போடுங்கள்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728