ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சில சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சில சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். ரேவதி நட்சத்திரத்திற்குரிய கிரகம் புதன்பகவான்ஆவார். புதனின் அதிதேவதை மாகாவிஷ்ணு என்பதால் உங்களின் இஷ்டதெய்வமாக மாகாவிஷ்ணு மாகாலட்சுமியை வணங்கிவர பலயோகபலன் உண்டாகும். ஆண்டுக்கு ஒருமுறையாவது புதனுக்குரிய ஸ்தலமாகிய குருவாயூர்சென்று குழந்தை கிருஷ்ணனை வழிபடுவது சிறப்பைத்தரும்.
உங்கள் நட்சத்திரத்தில் முக்திபெற்ற நாயன்மார்கள். 1.கலிகம்ப நாயனார் 2.கலிக்காம நாயனார் 3.வாயிலா நாயனார் ஆவார்கள். பெரியபுராணம் நூல் வாங்கி இந்த நாயன்மார்கள் வரலாறைத் தெரிந்துகொண்டு அவர்கள் செய்த பக்தியையும் தர்மகாரியங்களையும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து காலையில் எழுந்தவுடன் அவர்கள் திருநாமத்தை மனதில் நினைத்து வாழ்ந்து வந்தால் எந்த துன்பமும் உங்களை நெருங்காது. வாழ்க்கையில் சீரானமுன்னேற்றமும் அடைவீர்கள். சப்தரிஷிகளின் கோத்திரத்தில் உங்கள் நட்சத்திரத்திற்க்குரிய கோத்திரம் புலஸ்திஆவார். கோவிலில் அர்ச்சனை செய்யும் போது ராசி நட்சத்திரம் கோத்திரம் கூறி அர்ச்சனை செய்யுங்கள். பஞ்சபட்சி சாஸ்திரப்படி உங்களுக்குரிய பட்சி மயிலாகும். நட்புபட்சிகள் வல்லூறு மற்றும் கோழி ஆகும். பகைபட்சிகள் காகம் மற்றும் ஆந்தையாகும். திருமணத்தின் போது பகைபட்சிகளை இணைக்கக்கூடாது என பஞ்சபட்சி சாஸ்திரம் கூறுகிறது. இன்றும் கிராமபுரங்களில் உள்ள ஜோதிடர்கள் கடைபிடிக்கவும் செய்கிறோம். திருமணத்தின் போது பகைபட்சிகளை தவிர்க்கவும்.
ரேவதி நட்சத்திரத்திற்கு உரியமரம் இலுப்பை மரமாகும். உங்கள் வீட்டில் மரம் வளர்க்க வசதியிருந்தால் ஒருமரமாவது வளர்ப்பது மிகவும் யோகம்தரும். உங்களுக்கு விவசாயநிலம் இருந்தால் இருமரம் வளர்த்து வாருங்கள். ஆண்டுக்கு ஒருமுறை வீட்டில் கணபதிகோமம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். கணபதிகோமம் பண்ணும் போது இலுப்பை மரக்குச்சிகளையும் சமித்தாகப் பயன்படுத்துவது மிகவும் சிறப்பாக அமையும். கோமம் செய்பவர்களிடம் முதலிலே சொல்லிவிட்டால் குச்சியை அவர்களே தயார்செய்துகொள்வார்கள். 27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகள் சில நர்சரிகளில் இப்போது தயார் செய்கிறார்கள் அவர்களிடம் வாங்கிமரம் வளர்த்து பயன்பெறுங்கள்.
No comments