Header Ads

  • Breaking News

    அரசு உத்யோகம் பெரும் யோகம் தரும் வழிபாடு ; மகரராசிக்காரர்களுக்கு


    மகரராசிக்காரர்களுக்கு
    .
    அரசு உத்யோகம் பெரும் யோகம் தரும் வழிபாடு
    .
    மகரராசிக்காரர்கள் அரசு உத்யோகம் பெரும் யோகம் பெற அருகில் உள்ள சிவஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை மகரராசிக்கு யோகம் தரும் நேரமாகிய இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஆலயத்திலுள்ள கன்னி மூல கணபதியை வணங்கி பின்பு முருகன் வள்ளி தெய்வானையை வணங்கி பின்பு நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரபகவானுக்கும் சூரியபகவானுக்கும் பசுநெய் தீபம் ஏற்றி நவக்கிரகங்களை 9 முறை வலம்வந்து மூலவராகியசிவபெருமானையும் அம்பாளையும்19 வாரங்கள் தொடர்ந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் வழிபட அரசு உத்யோகம் அல்லது கல்விக்குத்தகுந்த உயர்ந்த உத்தியோகம் அமையும். வழிபாடு துவங்கும் முதல் வாரமும் கடைசி வாரமும் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும். நவக்கிரக மேடையில் விளக்கேற்றும் வசதி இல்லை என்றால் கோவிலில் உள்ள பொது விளக்கேற்றும் மேடையில் தீபம் ஏற்றிக்கொள்ளவும்.
    .
    வழிபாட்டுக் குறிப்புகள்
    .
    அரசு உத்யோகம் யாருக்கு அமைய வேண்டுமோ அவர் ராசிக்கே வழிபாட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.ஆண்,பெண் பேதமில்லை. அரசு உத்யோகம் பெரும் நபரே வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.அவர் போக முடியாத நாட்களில் குடும்பத்தில் யாராவது ஒரு நபர் சென்று வரலாம். குடும்பத்தில் யாருமே போகமுடியாத நிலை வந்தால் மீண்டும் முதலில் இருந்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பரிகார வழிபாடு செய்யும் போது வழிபாட்டு வாரம் முடிந்தபின் தேவை என்றால் அடுத்த பரிகார வழிபாட்டைத் தொடங்கலாம் . பரிகாரவழிபாடு தொடங்கிய சிலவாரங்களிலேயே பலன்கிடைத்துவிட்டால் இடையில்நிறுத்தாமல் வழிபாட்டு வாரம் முழுவதையும் நிறைவுசெய்ய வேண்டும். வாரம் ஒரு முறை பல வாரங்கள் தொடர்ந்து வழிபடவேண்டும் என்பதால் விரதமுறைகள் தேவை இல்லை ஆனால் கண்டிப்பாக கோவிலுக்குப்போகும் நாட்களில் மட்டும் மது, மாமிசம் தவிர்க்க வேண்டும்.
    .
    Jothidar Thangamalai's photo.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728