விருச்சிகராசிக்காரர்களுக்கு கடன் தொல்லை அகலச்செய்யும் வழிபாடு .
விருச்சிகராசிக்காரர்களுக்கு கடன் தொல்லை அகலச்செய்ய அருகில் உள்ள சிவ ஆலயத்திற்க்கு செவ்வாய்க்கிழமை விருச்சிகராசிக்கு யோகம் தரும் நேரமாகிய இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஆலயத்திலுள்ள கன்னி மூல கணபதியை வணங்கி பின்பு முருகன் வள்ளி தெய்வானையை வணங்கி பின்பு நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கும், செவ்வாய்பகவானுக்கும் பசுநெய் தீபம் ஏற்றி நவக்கிரகங்களை 9 முறை வலம்வந்து மூலவராகியசிவபெருமானையும் அம்பாளையும் 11 வாரங்கள் தொடர்ந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் வழிபட அதிவிரைவில் கடன் தொல்லை அகன்று செய்துவரும் தொழில் அல்லது வியாபாரத்தில் இலாபம் பெருகும். வழிபாடு துவங்கும் முதல் வாரமும் கடைசி வாரமும் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும்.நவக்கிரக மேடையில் விளக்கேற்றும் வசதி இல்லை என்றால் கோவிலில் உள்ள பொது விளக்கேற்றும் மேடையில் தீபம் ஏற்றிக்கொள்ளவும்.
.
யோகநேரத்தில் வழிபடுவோம் யோகத்தில் வாழ்ந்திடுவோம்.
வழிபாடு பெருகட்டும் வாழ்வு சிறக்கட்டும்.
.
வழிபாட்டுக் குறிப்புகள்
.
கடன்தொல்லை யாருக்கு விலகவேண்டுமோ அவர்ராசிப்படி வழிப்பாட்டை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.ஆண்,பெண் பேதமில்லை. யோகம்பெரும் நபரே வழிபாட்டை தொடங்கவேண்டும். அவர் கோவிலுக்கு போக முடியாத நாட்களில் குடும்பத்தில்யாராவது ஒருநபர் கோவிலுக்கு சென்று வரலாம். யாருமே போகமுடியாத நிலை வந்தால் மீண்டும் முதலில் இருந்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பரிகார வழிபாடு செய்யும் போது வழிபாட்டு வாரம் முடிந்தபின் தேவை என்றால் அடுத்த பரிகார வழிபாட்டைத் தொடங்கலாம் . பரிகாரவழிபாடு தொடங்கிய சிலவாரங்களிலேயே பலன்கிடைத்துவிட்டால் இடையில்நிறுத்தாமல் வழிபாட்டு வாரம் முழுவதையும் நிறைவுசெய்ய வேண்டும். வாரம் ஒரு முறை பல வாரங்கள் தொடர்ந்து வழிபடவேண்டும் என்பதால் விரதமுறைகள் தேவை இல்லை ஆனால் கண்டிப்பாக கோவிலுக்குப்போகும் நாட்களில் மட்டும் மது, மாமிசம் தவிர்க்க வேண்டும்.
No comments