தாரா பலனும் சூட்சமங்களும்
ஜோதிடத்தில் சந்திரன் ஒரு ராசியை கடக்க இரண்டே கால் (2.25) நாட்கள் எடுத்துக்கொள்கிறார். ஆதாவது 54 மணிநேரம். ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் வீதம் சந்திரன் ஒரு பாதத்தை கடக்க சரியாக (54 / 9 = 6) ஆறு மணிநேரம் எடுத்துக்கொள்கிறது.
இதன் மூலம் அறிவது என்னவென்றால் தினமும் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை நட்சத்திர பாதம் மாறும் சந்திரன் அதற்கேற்ப தன் கோச்சார பலன்களை தாரை அல்லது தாரா பலன் என்ற முறையில் வழங்குகிறார்.
சமஸ்கிருத மொழியில் தாரா அல்லது தாரை என்றால் நட்சத்திரம் ஏனப்பொருள். தாரைகள் முதலில் ஜென்ம நட்சத்திரத்தில் தொடங்கி ஒன்பது நட்சத்திரம் வரை கணக்கிடப்பட்டு பின் மீண்டும் முதலில் இருந்து கணக்கிடப்படுகிறது.
தாரைகளின் பெயர்கள்:
1. ஜென்ம தாரை-உறுதியும் வெற்றி தரும்.
2. சம்பத்து தாரை-சர்வசம்பத்துகளை தரும்
3. விபத்து தாரை-அசம்பாவிதம் உண்டாகும்.
4. சேமத்தாரை-நலம் தரும்.
5. பிரத்தயக்கு தாரை-சிக்கல்கள் தரும்.
6. சாதக தாரை-நல்லகாரியம் செய்யலாம்.
7. வதைத்தாரை- துன்பம் தரும்.
8. மித்திர தாரை-தெய்வகாரியம் செய்யலாம்.
9. பரம மித்ர தாரை- சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்.
இதில் 3,5,7 இவை அனைத்தும் அசுபதாரைகள். மற்றவை சுபத்தாரைகள்.
இப்போது தாரா பலன் அறியலாம், ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் மகம் எனில் அது சிம்மராசியில் வருகிறது. சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார் எனக்கொள்க.
சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார் எனில், அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. இதில் உத்திராடம் 3 பாதங்களும், திருவோணம் 4 பாதங்களும், அவிட்டம் 2 பாதங்களும் உள்ளன.
மகரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் கால அளவு பின்வருமாறு:
உத்திராடம் 3 பாதங்கள் X 6 = 18 மணிநேரம்.
திருவோணம் 4 பாதங்கள் X 6 = 24 மணிநேரம்
அவிட்டம் 2 பாதங்கள் X 6 = 12 மணிநேரம்
இதில் உத்திராடம் என்பது மகத்தில் இருந்து 12 வது நட்சத்திரம். இதன் தாரை வகை அறிய 12/9= 1.3. இங்கே 1 ஈவு மற்றும் 3 மீதி. இதில் மூன்று என்பதே தாரை வகை. மூன்று விபத்துத்தாரை எனவே உத்திராடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் 18 மணிநேரம் அசுப பலன் இருக்கும்.
அடுத்து திருவோணம் இது 13 நட்சத்திரம் இதன் தாரைவகை 13/9 = 1.4. 1 ஈவு மீதி 4. 4 என்பது சேமத்துத்தாரை எனவே சந்திரன் திருவோணத்தில் சஞ்சரிக்கும் 24 மணிநேரம் நல்லபலன்கள் உண்டாகும்.
அடுத்து, அவிட்டம் இது 14 நட்சத்திரம், இதன் தாரைவகை 14/9=1.5. இங்கு 1 ஈவு, மீதி 5. இதில் ஐந்து என்பது பிரத்தயக்கு தாரை என அறிக. இதனால் சந்திரன் அவிட்டத்தில் சஞ்சரிக்கும் 12 மணிநேரம் அசுப பலன்.
இதன் மூலம் சந்திராஷ்டமம் என்பது 24 மணிநேரமும் ஜாதகரை பாதிப்பதில்லை எனவும், பாதிப்பு ஏற்படும் நட்சத்திர தாரை வரும் மணிநேரங்கள் அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அறிக.
இதுபோலவே ஜென்ம லக்னத்திற்கு, லக்னம் பெறும் சாரம் கொண்டு, தாரைபலம் கணித்து, கிரகங்களின் சாரம் கண்டு பலன் கூறலாம் என தெளிக. ஆனால் இது ஆய்வுக்குரியது. சோதித்து பார்க்கவும்.
ஒருவரின் லக்ன சாரம் மற்றும் லக்னாதிபதி நின்ற சாரம் 3,5,7 தாரையாக இருப்பின் லக்னம் பலமுள்ளது எனலாம். இது போலவே கேந்திரம் மற்றும் திரிகோணத்திற்கு பார்க்கலாம்.
ஒருவரின் லக்ன சாரம் மற்றும் லக்னாதிபதி நின்ற சாரம் 3,5,7 தாரையாக இருப்பின் லக்னம் பலமுள்ளது எனலாம். இது போலவே கேந்திரம் மற்றும் திரிகோணத்திற்கு பார்க்கலாம் .
இவ்வாறு சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திர பாதம் வைத்து தாராபலன் அறியலாம்.
இது ஜோதிடத்தின் மிக முக்கிய சூட்சமம்.
No comments