Header Ads

  • Breaking News

    பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சில சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.


    பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சில சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நட்சத்திரத்திற்குறிய கிரகம் சுக்கிரபகவான் ஆவார். சுக்கிரனின் அதிதேவதை மஹாலட்சுமி என்பதால் உங்களின் இஷ்டதெய்வமாக மஹாவிஷ்ணூவையும் மஹாலட்சுமியையும் வணங்கிவர பலயோகபலன் உண்டாகும்.ஆண்டுக்கு ஒருமுறையாவது ஸ்ரீரங்கம் சென்று ரெங்கமன்னரையும் ஆண்டாளையும் வழிபடுவது சிறப்பைத்தரும். உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்கள். 1.காரிநாயனார் 2.சிறப்புலிநாயனார் 3.சாக்யநாயனார் ஆவார்கள். பெரியபுராணம் நூல் வாங்கி இந்த மூன்று நாயன்மார்கள் வரலாறையும் தெரிந்துகொண்டு அவர்கள் செய்த பக்தியையும் தர்மகாரியங்களையும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து காலையில் எழுந்தவுடன் அவர்கள் திருநாமத்தை மனதில் நினைத்து வாழ்ந்து வந்தால் எந்த துன்பமும் உங்களை நெருங்காது. வாழ்க்கையில் சீரானமுன்னேற்றமும் அடைவீர்கள். சப்தரிஷிகளின் கோத்திரத்தில் .உங்கள் நட்சத்திரத்திற்குரிய கோத்திரம் புலகர் ஆவார். கோவிலில் அர்ச்சனை செய்யும் போது ராசி. நட்சத்திரம். கோத்திரம் கூறி அர்ச்சனை செய்யுங்கள்.

    பஞ்சபட்சி சாஸ்திரப்படி உங்கள் நட்சத்திரத்திற்குரிய பட்சி கோழி ஆகும். நட்புபட்சி மயில் ஆகும். பகைபட்சி வல்லூறு ஆகும். சமபட்சிகள் ஆந்தை மற்றும் காகமாகும். திருமணத்தின் போது பகைபட்சியை இணைக்கக்கூடாது என பஞ்சபட்சி சாஸ்திரம் கூறுகிறது. இன்றும் கிராமபுரங்களில் உள்ள ஜோதிடர்கள் கடைபிடிக்கவும் செய்கிறோம். திருமணத்தின் போது பகைபட்சியை தவிர்க்கவும்.
    உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரம் வஞ்சிமரமாகும். உங்கள் வீட்டில் மரம் வளர்க்க வசதியிருந்தால் ஒருமரமாவது வளர்ப்பது மிகவும் யோகம்தரும். உங்களுக்கு விவசாயநிலம் இருந்தால் இருமரம் வளர்த்துவாருங்கள். ஆண்டுக்கு ஒருமுறை வீட்டில் கணபதிகோமம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். கணபதிகோமம் பண்ணும் போது வஞ்சிமரக்குச்சிகளையும் சமித்தாக பயன்படுத்துவது மிகவும் சிறப்பாக அமையும். கோமம் செய்பவர்களிடம் முதலிலே சொல்லிவிட்டால் குச்சியை அவர்களே தயார் செய்துகொள்வார்கள். 27. நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகள் சில நர்சரிகளில் இப்போது தயார்செய்கிறர்கள் அவர்களிடம் வாங்கி மரம் வளர்த்து பயன்பெறுங்கள். 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728