Header Ads

  • Breaking News

    மேஷராசிக்காரர்களுக்கு புதிய தொழில் அல்லது வியாபாரம் துவங்கும் யோகம் தரும் வழிபாடு .


    மேஷராசிக்காரர்களுக்கு புதிய தொழில் அல்லது வியாபாரம் துவங்கும் யோகம் பெற அருகில் உள்ள சிவஆலயத்திற்கு சனிக்கிழமை மேஷராசிக்கு யோகம் தரும் நேரமாகிய காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஆலயத்திலுள்ள கன்னி மூல கணபதியை வணங்கி பின்பு முருகன் வள்ளி தெய்வானையை வணங்கி பின்பு நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கும் சனிபகவானுக்கும் பசுநெய் தீபம் ஏற்றி நவக்கிரகங்களை 9 முறை வலம்வந்து மூலவராகிய சிவபெருமானையும் அம்பாளையும் 12 வாரங்கள் தொடர்ந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் வழிபட அதிவிரைவில் புதிய தொழில் அல்லது வியாபாரம் துவங்கும் யோகம் அமையும். வழிபாடு துவங்கும் முதல் வாரமும் கடைசி வாரமும் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும்.நவகிரக மேடையில் தீபம் ஏற்றும் வசதி இல்லை என்றால் கோவிலில் உள்ள பொது விளக்கேற்றும் மேடையில் விளக்கை ஏற்றிக் கொள்ளவும் .

    யோகநேரத்தில் வழிபடுவோம் யோகத்தில் வாழ்ந்திடுவோம்.
    வழிபாடு பெருகட்டும் வாழ்வு சிறக்கட்டும்.

    வழிபாட்டுக் குறிப்புகள்
    புதிய தொழில் அல்லது வியாபாரம் துவங்கும் யோகம் யாருக்கு அமையவேண்டுமோ அவர்ராசிப்படி வழிப்பாட்டை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.ஆண்,பெண் பேதமில்லை. யோகம்பெரும் நபரே வழிபாட்டை தொடங்கவேண்டும். அவர் கோவிலுக்கு போக முடியாத நாட்களில் குடும்பத்தில்யாராவது ஒருநபர் கோவிலுக்கு சென்று வரலாம். யாருமே போகமுடியாத நிலை வந்தால் மீண்டும் முதலில் இருந்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பரிகார வழிபாடு செய்யும் போது வழிபாட்டு வாரம் முடிந்தபின் தேவை என்றால் அடுத்த பரிகார வழிபாட்டைத் தொடங்கலாம் . பரிகாரவழிபாடு தொடங்கிய சிலவாரங்களிலேயே பலன்கிடைத்துவிட்டால் இடையில்நிறுத்தாமல் வழிபாட்டு வாரம் முழுவதையும் நிறைவுசெய்ய வேண்டும். வாரம் ஒரு முறை பல வாரங்கள் தொடர்ந்து வழிபடவேண்டும் என்பதால் விரதமுறைகள் தேவை இல்லை ஆனால் கண்டிப்பாக கோவிலுக்குப்போகும் நாட்களில் மட்டும் மது, மாமிசம் தவிர்க்க வேண்டும்.
    கோவிலுக்குப் போகமுடியாத நிலை
    வழிபாட்டைத் தொடங்கும் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் 30 நாட்களும் யாராவது இறந்தால் மூன்று மாதமும் இரத்தச்சொந்தமுள்ளகுடும்பத்தில் யாராவது இறந்தால் 30 நாட்க்கள் கோவிலுக்கு போகக்கூடாது . மற்ற உறவினர்கள் என்றால் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வழிபாடு செய்துகொண்டிருக்கும் போது ஊர் மாறி குடிபோகும் நிலை வந்தால் மட்டும் அங்கு அருகில் உள்ள கோவிலில் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொள்ளலாம். இரு கோவில் வாரங்களையும் சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொண்டு வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728