Header Ads

  • Breaking News

    மனநோய் போக்கும் சங்கு புஷ்பம்

    மனநோய் போக்கும் சங்கு புஷ்பம்
    **********************************************
    தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - சங்கு புஷ்பம்
    சித்தர்களின் கண்டுபிடிப்பு மூலிகைகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது சங்கு புஷ்பம். இந்த சங்கு புஷ்பம் சித்தமருத்துவத்தில் மட்டுமல்ல இறைவனோடும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இறைசக்தி மிகுந்த புனிதமான மலர்களில் ஒன்று இது. சங்கு புஷ்பக் கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் முற்றிலும் நீல அல்லது வெண்மை நிறத்திலும், நீலமும் வெண்மையும் கலந்த நிறத்திலும் காணப்படும். அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. தட்டையான காய்களையுடையது. பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப்படுகின்றது.
    இது சிறந்த மருத்துவப் பயன் உடையது. இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ என்ற பெயரும் வந்தது. இறைவனுக்கு மட்டுமே உரியதான சங்கு புஷ்பத்தை சர்வ சாதாரணமாக நம்மால் எங்கும் காணமுடியும். இறைவன் இவ்வுலகில் எங்கும் வியாபித்து இருப்பது போலவே சங்கு புஷ்பமும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது! வெண் சங்கு புஷ்பத்தை சிவனாகவும், நீல நிற சங்கு புஷ்பத்தை விஷ்ணுவாகவும் ஆன்மிக ரீதியாகக் கருதுகிறார்கள். அதனால்தான் தமிழகத்தில் ஒரு விஷ்ணு கோயிலிலும், சிவன் கோயிலிலும் சங்கு புஷ்பம் கொடி இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது.
    கோயமுத்தூரில், கோட்டைமேடு என்ற இடத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்ட 31வது சிவன் கோயில் இது. சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அசுரர்களின் தொல்லைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கிய தலம் இது. இங்கே தேவர்கள் வந்தபோது, ஈஸ்வரன் சங்கு புஷ்பக் கொடிகளுக்கு இடையே லிங்க வடிவமாக எழுந்தருளி தேவர்களுக்கு காட்சியளித்தார். இதனால்தான் சங்கமேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
    இத்தலத்தில் கருவறையில் உள்ள லிங்க வடிவத்தின் உச்சியில் பிரம்ம சூத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திருத்தலத்தில் உள்ள இறைவனுக்கு சங்கு புஷ்பங்களை சாத்தி வழிபட்டு சென்றால் தீராத குடும்பப் பகை தீர்ந்து விடும்; வியாபார போட்டியால் ஏற்படும் பகை உள்பட அனைத்துவிதமான பகைகளும் தீர்ந்துவிடும் என்பது இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் செல்லும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தலத்தில் தேவர்களுக்கு இறைவன் சங்கு புஷ்பக் கொடிகளுக்கு நடுவில் காட்சி கொடுத்து அருளியதால் இங்கே சங்கு புஷ்பக் கொடி தலவிருட்சமாகத் திகழ்கிறது.
    சங்கு புஷ்பக் கொடியின் சிறப்பை உணர்த்தும் மற்றொரு சிறப்பான திருத்தலம் திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலாகும். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை என்னும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவு. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலுக்கு எதிரே உள்ள சார புஷ்கரணியின் மேற்குக் கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோருக்குத் தனிச் சந்நதிகள் உள்ளன. கோயில் பிராகாரத்தில் உள்ள உள்சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமன், ராஜகோபாலன், ஆண்டாள், சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன.
    இத்தலத்தில் மூலவராக அருள்பாலிக்கும் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் மட்டும்தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி ஆகிய ஐந்து தேவியர்களுடன் தரிசனமளிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து நிறைந்தது. இதனாலேயே இக்கோயிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்புமிகு திருக்கோயிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் சங்கு புஷ்பக் கொடி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் கொடியில் பூக்கும் சங்கு புஷ்பங்களை பக்தர்கள் பறித்து வந்து கோயிலில் உள்ள தாயாருக்கு சாத்தி அர்ச்சனை செய்தால் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை சங்கு புஷ்பத்தின் பெருமையை உணர்த்துகிறது.
    பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்தில்தான் மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வேதங்களை வைத்துக் காப்பாற்றினார் என்பதும், மார்க்கண்டேயருக்கு ஈசன் அருளிய தலம் இது என்பதும் இத்தலம் குறித்த வரலாறாகும். ஒருமுறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் எனக் கேட்டு இங்குள்ள சாரபுஷ்கரணியில் மேற்குக் கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் புரிந்தாள். காவிரியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் அவள் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்தார்.
    அதுகண்டு பெருமகிழ்ச்சி கொண்ட அவள் பெருமாளிடம், எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என்று வேண்டியதால் பெருமாளும் அப்படியே செய்தார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் “திருச்சேறை” என்றானது. மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் காட்சி தருகிறார்கள். செய்த பாவங்கள் விலக இத்தலத்தில் வழிபாடு செய்தால் அதிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பதும் இன்னொரு நம்பிக்கை.
    விஷ்ணுவின் நிறத்தையே தனதாக்கிக்கொண்டுள்ளது சங்கு புஷ்பம். பூவின் வடிவமும் சங்கு வடிவத்தில் இருப்பதால் சங்கு சக்ர கதா பாணியான மகாவிஷ்ணுவின் அம்சமாகவே இது திகழ்கிறது. மகாபாரதத்தில் இந்த மலர் அபராஜிதா என்று அழைக்கப்படுகிறது. சிவனுக்குரிய காலை, மதியம், மாலை பூஜையில் பங்குபெறும் மலர்களில், மதிய பூஜையில் வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, நெய்தல், வில்வம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ்த்தாமரை ஆகிய பூக்களோடு சங்கு புஷ்பமும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐப்பசி மாத பௌர்ணமியன்று இறைவனுக்கு சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டிய மலர்களில் முதல் இடத்தை பிடித்து இருப்பது வெண் சங்கு புஷ்பம்தான்.
    அதன் பிறகு தான் வில்வம், கொன்றை, மகிழம், மல்லிகை ஆகியவை. அம்பாளுக்குரிய அற்புத மலர்களிலும் சங்கு புஷ்பம் தனி இடம் பிடித்திருக்கிறது. சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி தினத்தன்று நீலநிறப் புடவை அல்லது நீலநிற வஸ்திரம் சாத்தி, நீல சங்கு புஷ்பத்தால் அன்னையை அலங்கரித்து, அர்ச்சனை செய்து, எள்ளு சாதம், தேன் கலந்த பால் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு விநியோகித்து வந்தால், தீராத நோய்களும் தீரும். நீண்ட காலமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற மனக் கஷ்டமும் விலகிவிடும்.
    திருமியச்சூர் லலிதாம்பிகை கோயிலில் சதய நட்சத்திரத்தன்று, தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து, அங்கே எழுந்தருளியுள்ள ஈசன் மேகநாத சுவாமியைப் பூஜித்து மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதே இலையில் வெண் அன்னத்தை நிவேதனம் செய்து தானம் செய்து வந்தாலும், பிரசாதமாக உட்கொண்டாலும் கடும் நோய்கள் காணாமல் போய்விடும். சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் அந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.
    இவற்றில் தசவாயுக்களில் பஞ்ச பிராணன் என்பது பிராணன், ஆபானன், வியானன், உதாதனன், சமானன் ஆகியவையாகும். ஒவ்வொரு வாயுக்களும் நம் உடம்பில் வெவ்வேறு வகையிலான மாற்றங்களை ஏற்படுத்தி உடலை பாதுகாக்கிறது. இவற்றில் சமானன் வாயு என்பது உடம்பில் நடுப்பகுதியில் உள்ளது. உணவை செரிக்க உதவுவதுதான் சமானன் வாயுவின் முக்கியப் பணியாகும். இந்தப் பணியில் சற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன்மூலம் உடல்நலம் குன்றுகிறது. இத்தகைய பாதிப்பை சரி செய்யக்கூடிய மருத்துவ ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது.
    அதுதவிர மனம், உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களில் இருந்து சங்கு புஷ்பக் கொடி மனிதர்களை பாதுகாக்கிறது. இப்படி சிறப்புகளை பெற்றுத் திகழும் சங்கு புஷ்பக் கொடி காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த சங்கு புஷ்பக் கொடி ஆசியாவில் தோன்றியது. தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களிலும் காணப்படுகிறது. சங்கு புஷ்பம் கொடியாக வளரக்கூடியது. ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் வளரும். தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக சங்கு புஷ்பம் பயன்படுத்தப்படுகிறது.
    ரத்தக்குழாய் அடைப்புக்கு முறைப்படி சங்கு புஷ்பங்களை தூய நீரில் ஊறவைத்துக் குடித்து வர, நல்ல பலன் தெரியும். கட்டிகள் மிகவும் வீக்கமாக இருந்தால் சங்குப்பூ இலைச்சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து பருகி வர நிவாரணம் கிடைக்கும். யானைக்கால் வியாதிக்கும் இதன் விதைகள், வேர்கள் சிறந்த மருந்தாகும். சங்கு புஷ்பக் கொடியின் விதை மற்றும் வேர்ப் பகுதிகள் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்தப் பூவிற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளதுபோல் ஆயுள் வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அகநானூறு, ஐங்குறு நூறு, நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது சங்கு புஷ்பம்

    Talaviruṭcaṅkaḷ tarum palaṉkaḷ - caṅku puṣpam
    cittarkaḷiṉ kaṇṭupiṭippu mūlikaikaḷil mukkiya iṭattai piṭittiruppatu caṅku puṣpam. Inta caṅku puṣpam cittamaruttuvattil maṭṭumalla iṟaivaṉōṭum neruṅkiya toṭarpu uḷḷatu. Iṟaicakti mikunta puṉitamāṉa malarkaḷil oṉṟu itu. Caṅku puṣpak koṭi ellā iṭaṅkaḷilum vēliyōraṅkaḷil vaḷarakkūṭiyatu. Itaṉ pūkkaḷ muṟṟilum nīla allatu veṇmai niṟattilum, nīlamum veṇmaiyum kalanta niṟattilum kāṇappaṭum. Aḻakukkāka vīṭukaḷilum vaḷarkkappaṭukiṉṟatu. Taṭṭaiyāṉa kāykaḷaiyuṭaiyatu. Potuvāka maruttuvattiṟku veṇṇiṟap pūvai uṭaiya veṇ kākkaṭṭāṉē payaṉpaṭuttappaṭukiṉṟatu.
    Itu ciṟanta maruttuvap payaṉ uṭaiyatu. Itaṉ pūkkaḷ pārppataṟku caṅku pōl iruppatāl caṅkup pū eṉṟa peyarum vantatu. Iṟaivaṉukku maṭṭumē uriyatāṉa caṅku puṣpattai carva cātāraṇamāka nam'māl eṅkum kāṇamuṭiyum. Iṟaivaṉ ivvulakil eṅkum viyāpittu iruppatu pōlavē caṅku puṣpamum eṅkum nīkkamaṟa niṟaintirukkiṟatu! Veṇ caṅku puṣpattai civaṉākavum, nīla niṟa caṅku puṣpattai viṣṇuvākavum āṉmika rītiyākak karutukiṟārkaḷ. Ataṉāltāṉ tamiḻakattil oru viṣṇu kōyililum, civaṉ kōyililum caṅku puṣpam koṭi iṟaivaṉōṭu cērttu vaṇaṅkappaṭukiṟatu.
    Kōyamuttūril, kōṭṭaimēṭu eṉṟa iṭattil srī'akilāṇṭēsvari camēta srīcaṅkamēsvarar ālayam uḷḷatu. Cōḻa maṉṉaṉ karikāl cōḻaṉāl kaṭṭappaṭṭa 31vatu civaṉ kōyil itu. Civaperumāṉait tavira vēṟu yārālum vella muṭiyāta varattiṉaip peṟṟa acurarkaḷiṉ tollaikaḷiliruntu taṅkaḷaik kāppāṟṟumpaṭi tēvarkaḷ pūmikku vantu civaperumāṉai vaṇaṅkiya talam itu. Iṅkē tēvarkaḷ vantapōtu, īsvaraṉ caṅku puṣpak koṭikaḷukku iṭaiyē liṅka vaṭivamāka eḻuntaruḷi tēvarkaḷukku kāṭciyaḷittār. Itaṉāltāṉ caṅkamēsvarar eṉṟu peyar peṟṟār.
    Ittalattil karuvaṟaiyil uḷḷa liṅka vaṭivattiṉ ucciyil piram'ma cūttiram poṟikkappaṭṭuḷḷatākavum kūṟappaṭukiṟatu. Ittiruttalattil uḷḷa iṟaivaṉukku caṅku puṣpaṅkaḷai cātti vaḻipaṭṭu ceṉṟāl tīrāta kuṭumpap pakai tīrntu viṭum; viyāpāra pōṭṭiyāl ēṟpaṭum pakai uḷpaṭa aṉaittuvitamāṉa pakaikaḷum tīrntuviṭum eṉpatu ittalattiṟku vantu iṟaivaṉai vaṇaṅkic cellum paktarkaḷiṉ acaikka muṭiyāta nampikkai. Ittalattil tēvarkaḷukku iṟaivaṉ caṅku puṣpak koṭikaḷukku naṭuvil kāṭci koṭuttu aruḷiyatāl iṅkē caṅku puṣpak koṭi talaviruṭcamākat tikaḻkiṟatu.
    Caṅku puṣpak koṭiyiṉ ciṟappai uṇarttum maṟṟoru ciṟappāṉa tiruttalam tiruccēṟai cāranātaperumāḷ kōyilākum. Tamiḻnāṭṭil tañcāvūr māvaṭṭam, kumpakōṇam arukē uḷḷa tiruccēṟai eṉṉum ūril amaintuḷḷatu. Kumpakōṇattiliruntu cumār 14 ki.Mī. Tolaivu. Ikkōyil 1000 āṇṭukaḷ paḻamaiyāṉatu. Ikkōyilukku etirē uḷḷa cāra puṣkaraṇiyiṉ mēṟkuk karaiyil akattiyar, piram'mā, kāviri ākiyōrukkut taṉic cannatikaḷ uḷḷaṉa. Kōyil pirākārattil uḷḷa uḷcuṟṟil cīṉivācapperumāḷ, āḻvārkaḷ, nam'māḻvār, uṭaiyavar, kūrattāḻvār, rāmar, aṉumaṉ, rājakōpālaṉ, āṇṭāḷ, cattiyapāmā, rukmaṇi, naracim'ma mūrtti pāla cāranātar ākiyōriṉ cannatikaḷ uḷḷaṉa.
    Ittalattil mūlavarāka aruḷpālikkum cāranātaṉ niṉṟa kōlattil kiḻakku nōkki kāṭci tarukiṟār. Ittalattil maṭṭumtāṉ perumāḷ srītēvi, pūtēvi, makālaṭcumi, cāranāyaki, nīḷātēvi ākiya aintu tēviyarkaḷuṭaṉ taricaṉamaḷikkiṟār. Ittalattu maṇ mikavum cattu niṟaintatu. Itaṉālēyē ikkōyiliṉ mūlavar cāranātapperumāḷ eṉa aḻaikkappaṭukiṟār. Ittakaiya ciṟappumiku tirukkōyilukku contamāṉa nantavaṉattil caṅku puṣpak koṭi vaḷarkkappaṭṭu varukiṟatu. Intak koṭiyil pūkkum caṅku puṣpaṅkaḷai paktarkaḷ paṟittu vantu kōyilil uḷḷa tāyārukku cātti arccaṉai ceytāl peṇkaḷukku kuḻantai pākkiyam niccayam uṇṭu eṉṟa nampikkai caṅku puṣpattiṉ perumaiyai uṇarttukiṟatu.
    Piraḷaya kālattil piram'mā ittalattiltāṉ maṇṇeṭuttu kaṭam ceytu ataṉuḷ vētaṅkaḷai vaittuk kāppāṟṟiṉār eṉpatum, mārkkaṇṭēyarukku īcaṉ aruḷiya talam itu eṉpatum ittalam kuṟitta varalāṟākum. Orumuṟai kāvirittāy kaṅkaikku iṇaiyāṉa perumai taṉakkum vēṇṭum eṉak kēṭṭu iṅkuḷḷa cārapuṣkaraṇiyil mēṟkuk karai araca marattaṭiyil perumāḷai nōkkit tavam purintāḷ. Kāviriyiṉ tavattil makiḻnta perumāḷ kuḻantai vaṭivil avaḷ maṭiyil tavaḻntār. Piṉ karuṭa vākaṉattil caṅku cakkaratāriyāka aintu laṭcumikaḷuṭaṉ kāṭci tantār.
    Atukaṇṭu perumakiḻcci koṇṭa avaḷ perumāḷiṭam, eppōtum itē kōlattil iṅku kāṭci tara vēṇṭum eṉṟu vēṇṭiyatāl perumāḷum appaṭiyē ceytār. Tiruccāram eṉa vaḻaṅkappaṭṭa ittalam “tiruccēṟai” eṉṟāṉatu. Mūlastāṉattil perumāḷukku valatu pakkam mārkkaṇṭēyarum iṭatupakkam kāvirit tāyum kāṭci tarukiṟārkaḷ. Ceyta pāvaṅkaḷ vilaka ittalattil vaḻipāṭu ceytāl atiliruntu vimōcaṉam kiṭaikkum eṉpatu paktarkaḷiṉ nampikkai. Ittalattil uḷḷa perumāḷai vaḻipaṭṭāl 100 muṟai kāviriyil kuḷitta puṇṇiyam kiṭaikkum eṉpatum iṉṉoru nampikkai.
    Viṣṇuviṉ niṟattaiyē taṉatākkikkoṇṭuḷḷatu caṅku puṣpam. Pūviṉ vaṭivamum caṅku vaṭivattil iruppatāl caṅku cakra katā pāṇiyāṉa makāviṣṇuviṉ amcamākavē itu tikaḻkiṟatu. Makāpāratattil inta malar aparājitā eṉṟu aḻaikkappaṭukiṟatu. Civaṉukkuriya kālai, matiyam, mālai pūjaiyil paṅkupeṟum malarkaḷil, matiya pūjaiyil veṇtāmarai, araḷi, pūvaracampū, neytal, vilvam, marutāṇi, kōvitāram, ōritaḻttāmarai ākiya pūkkaḷōṭu caṅku puṣpamum iṭam peṟṟu iruppatu kuṟippiṭattakkatu. Atēpōl aippaci māta paurṇamiyaṉṟu iṟaivaṉukku cūṭṭi arccaṉai ceyya vēṇṭiya malarkaḷil mutal iṭattai piṭittu iruppatu veṇ caṅku puṣpamtāṉ.
    Ataṉ piṟaku tāṉ vilvam, koṉṟai, makiḻam, mallikai ākiyavai. Ampāḷukkuriya aṟputa malarkaḷilum caṅku puṣpam taṉi iṭam piṭittirukkiṟatu. Caṉikkiḻamaiyil varum paurṇami tiṉattaṉṟu nīlaniṟap puṭavai allatu nīlaniṟa vastiram cātti, nīla caṅku puṣpattāl aṉṉaiyai alaṅkarittu, arccaṉai ceytu, eḷḷu cātam, tēṉ kalanta pāl ākiyavaṟṟai naivēttiyamāka paṭaittu paktarkaḷukku viniyōkittu vantāl, tīrāta nōykaḷum tīrum. Nīṇṭa kālamāka āṭṭippaṭaittuk koṇṭirukkiṟa maṉak kaṣṭamum vilakiviṭum.
    Tirumiyaccūr lalitāmpikai kōyilil cataya naṭcattirattaṉṟu, tāmarai ilaikaḷil caṅku puṣpattai vaittu, aṅkē eḻuntaruḷiyuḷḷa īcaṉ mēkanāta cuvāmiyaip pūjittu maṉam urukap pirārttaṉai ceyya vēṇṭum. Atē ilaiyil veṇ aṉṉattai nivētaṉam ceytu tāṉam ceytu vantālum, piracātamāka uṭkoṇṭālum kaṭum nōykaḷ kāṇāmal pōyviṭum. Civavākkiyar eṉṟa cittar veṇ caṅku malar paṟṟi mikavum cilākittup pāṭiyirukkiṟār. Maṉita uṭalil uḷḷa tacavāyukkaḷ, tacanāṭikaḷiṉ aṭippaṭaiyilēyē cittarkaḷ anta kālattil maruttuva cikiccai aḷittu vantaṉar.
    Ivaṟṟil tacavāyukkaḷil pañca pirāṇaṉ eṉpatu pirāṇaṉ, āpāṉaṉ, viyāṉaṉ, utātaṉaṉ, camāṉaṉ ākiyavaiyākum. Ovvoru vāyukkaḷum nam uṭampil vevvēṟu vakaiyilāṉa māṟṟaṅkaḷai ēṟpaṭutti uṭalai pātukākkiṟatu. Ivaṟṟil camāṉaṉ vāyu eṉpatu uṭampil naṭuppakutiyil uḷḷatu. Uṇavai cerikka utavuvatutāṉ camāṉaṉ vāyuviṉ mukkiyap paṇiyākum. Intap paṇiyil caṟṟu pātippu ēṟpaṭṭāl ataṉmūlam uṭalnalam kuṉṟukiṟatu. Ittakaiya pātippai cari ceyyakkūṭiya maruttuva āṟṟal caṅku puṣpattukku uḷḷatu.
    Atutavira maṉam, uṟakkamiṉmai, naramput taḷarcci pōṉṟa nōykaḷil iruntu caṅku puṣpak koṭi maṉitarkaḷai pātukākkiṟatu. Ippaṭi ciṟappukaḷai peṟṟut tikaḻum caṅku puṣpak koṭi kākkaṇam ceṭi, māmūli, kākkaṭṭāṉ, nīla kākkaṭṭāṉ, caṅkaṅkuppi, caṅka puṣpi eṉṟu palvēṟu peyarkaḷil aḻaikkappaṭukiṟatu. Inta caṅku puṣpak koṭi āciyāvil tōṉṟiyatu. Taṟpōtu āppirikkā, amerikkā, āstirēliyā pōṉṟa kaṇṭaṅkaḷilum kāṇappaṭukiṟatu. Caṅku puṣpam koṭiyāka vaḷarakkūṭiyatu. Īrappatam atikam uḷḷa maṇṇil vaḷarum. Teṉkiḻakku āciyāvil uṇavil niṟattai cērppataṟkāka caṅku puṣpam payaṉpaṭuttappaṭukiṟatu.
    Rattakkuḻāy aṭaippukku muṟaippaṭi caṅku puṣpaṅkaḷai tūya nīril ūṟavaittuk kuṭittu vara, nalla palaṉ teriyum. Kaṭṭikaḷ mikavum vīkkamāka iruntāl caṅkuppū ilaiccāṟṟuṭaṉ iñciccāṟu kalantu paruki vara nivāraṇam kiṭaikkum. Yāṉaikkāl viyātikkum itaṉ vitaikaḷ, vērkaḷ ciṟanta maruntākum. Caṅku puṣpak koṭiyiṉ vitai maṟṟum vērp pakutikaḷ irumal, kallīral, maṇṇīral maṟṟum mūṭṭu vali nōyai kuṇappaṭuttavum utavukiṟatu. Intap pūviṟku pala maruttuva kuṇaṅkaḷ uḷḷatupōl āyuḷ vētattil pala nūṟṟāṇṭukaḷāka maṉatai cāntappaṭuttuvataṟkāṉa maruntāka caṅkupuṣpam payaṉpaṭuttappaṭṭu vantuḷḷatu. Akanāṉūṟu, aiṅkuṟu nūṟu, naṟṟiṇai, kuṟiñcippāṭṭu pōṉṟa caṅka ilakkiyaṅkaḷil iṭampeṟṟuḷḷatu caṅku puṣpam

    'மனநோய் போக்கும் சங்கு புஷ்பம்

**********************************************

தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - சங்கு புஷ்பம்

சித்தர்களின் கண்டுபிடிப்பு மூலிகைகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது சங்கு புஷ்பம். இந்த சங்கு புஷ்பம் சித்தமருத்துவத்தில் மட்டுமல்ல இறைவனோடும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இறைசக்தி மிகுந்த புனிதமான மலர்களில் ஒன்று இது. சங்கு புஷ்பக் கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் முற்றிலும் நீல அல்லது வெண்மை நிறத்திலும், நீலமும் வெண்மையும் கலந்த நிறத்திலும் காணப்படும். அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. தட்டையான காய்களையுடையது. பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப்படுகின்றது. 

இது சிறந்த மருத்துவப் பயன் உடையது. இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ என்ற பெயரும் வந்தது. இறைவனுக்கு மட்டுமே உரியதான சங்கு புஷ்பத்தை சர்வ சாதாரணமாக நம்மால் எங்கும் காணமுடியும். இறைவன் இவ்வுலகில் எங்கும் வியாபித்து இருப்பது போலவே சங்கு புஷ்பமும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது! வெண் சங்கு புஷ்பத்தை சிவனாகவும், நீல நிற சங்கு புஷ்பத்தை விஷ்ணுவாகவும் ஆன்மிக ரீதியாகக் கருதுகிறார்கள். அதனால்தான் தமிழகத்தில் ஒரு விஷ்ணு கோயிலிலும், சிவன் கோயிலிலும் சங்கு புஷ்பம் கொடி இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது.

கோயமுத்தூரில், கோட்டைமேடு என்ற இடத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்ட 31வது சிவன் கோயில் இது. சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அசுரர்களின் தொல்லைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கிய தலம் இது. இங்கே தேவர்கள் வந்தபோது, ஈஸ்வரன் சங்கு புஷ்பக் கொடிகளுக்கு இடையே லிங்க வடிவமாக எழுந்தருளி தேவர்களுக்கு காட்சியளித்தார். இதனால்தான் சங்கமேஸ்வரர் என்று பெயர் பெற்றார். 

இத்தலத்தில் கருவறையில் உள்ள லிங்க வடிவத்தின் உச்சியில் பிரம்ம சூத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திருத்தலத்தில் உள்ள இறைவனுக்கு சங்கு புஷ்பங்களை சாத்தி வழிபட்டு சென்றால் தீராத குடும்பப் பகை தீர்ந்து விடும்; வியாபார போட்டியால் ஏற்படும் பகை உள்பட அனைத்துவிதமான பகைகளும் தீர்ந்துவிடும் என்பது இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் செல்லும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தலத்தில் தேவர்களுக்கு இறைவன் சங்கு புஷ்பக் கொடிகளுக்கு நடுவில் காட்சி கொடுத்து அருளியதால் இங்கே சங்கு புஷ்பக் கொடி தலவிருட்சமாகத் திகழ்கிறது. 

சங்கு புஷ்பக் கொடியின் சிறப்பை உணர்த்தும் மற்றொரு சிறப்பான திருத்தலம் திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலாகும். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை என்னும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவு. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலுக்கு எதிரே உள்ள சார புஷ்கரணியின் மேற்குக் கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோருக்குத் தனிச் சந்நதிகள் உள்ளன. கோயில் பிராகாரத்தில் உள்ள உள்சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமன், ராஜகோபாலன், ஆண்டாள்,  சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன.

இத்தலத்தில் மூலவராக அருள்பாலிக்கும் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் மட்டும்தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி ஆகிய ஐந்து தேவியர்களுடன் தரிசனமளிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து நிறைந்தது. இதனாலேயே இக்கோயிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்புமிகு திருக்கோயிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் சங்கு புஷ்பக் கொடி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் கொடியில் பூக்கும் சங்கு புஷ்பங்களை பக்தர்கள் பறித்து வந்து கோயிலில் உள்ள தாயாருக்கு சாத்தி அர்ச்சனை செய்தால் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை சங்கு புஷ்பத்தின் பெருமையை உணர்த்துகிறது.

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்தில்தான் மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வேதங்களை வைத்துக் காப்பாற்றினார் என்பதும், மார்க்கண்டேயருக்கு ஈசன் அருளிய தலம் இது என்பதும் இத்தலம் குறித்த வரலாறாகும். ஒருமுறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் எனக் கேட்டு இங்குள்ள சாரபுஷ்கரணியில் மேற்குக் கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் புரிந்தாள். காவிரியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் அவள் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்தார். 

அதுகண்டு பெருமகிழ்ச்சி கொண்ட அவள் பெருமாளிடம், எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என்று வேண்டியதால் பெருமாளும் அப்படியே செய்தார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் “திருச்சேறை” என்றானது. மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் காட்சி தருகிறார்கள். செய்த பாவங்கள் விலக இத்தலத்தில் வழிபாடு செய்தால் அதிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பதும் இன்னொரு நம்பிக்கை.

விஷ்ணுவின் நிறத்தையே தனதாக்கிக்கொண்டுள்ளது சங்கு புஷ்பம். பூவின் வடிவமும் சங்கு வடிவத்தில் இருப்பதால் சங்கு சக்ர கதா பாணியான மகாவிஷ்ணுவின் அம்சமாகவே இது திகழ்கிறது. மகாபாரதத்தில் இந்த மலர் அபராஜிதா என்று அழைக்கப்படுகிறது. சிவனுக்குரிய காலை, மதியம், மாலை பூஜையில் பங்குபெறும் மலர்களில், மதிய பூஜையில் வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, நெய்தல், வில்வம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ்த்தாமரை ஆகிய பூக்களோடு சங்கு புஷ்பமும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐப்பசி மாத பௌர்ணமியன்று இறைவனுக்கு சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டிய மலர்களில் முதல் இடத்தை பிடித்து இருப்பது வெண் சங்கு புஷ்பம்தான். 

அதன் பிறகு தான் வில்வம், கொன்றை, மகிழம், மல்லிகை ஆகியவை. அம்பாளுக்குரிய அற்புத மலர்களிலும் சங்கு புஷ்பம் தனி இடம் பிடித்திருக்கிறது. சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி தினத்தன்று நீலநிறப் புடவை அல்லது நீலநிற வஸ்திரம் சாத்தி, நீல சங்கு புஷ்பத்தால் அன்னையை அலங்கரித்து, அர்ச்சனை செய்து, எள்ளு சாதம், தேன் கலந்த பால் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு விநியோகித்து வந்தால், தீராத நோய்களும் தீரும். நீண்ட காலமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற மனக் கஷ்டமும் விலகிவிடும்.

திருமியச்சூர் லலிதாம்பிகை கோயிலில் சதய நட்சத்திரத்தன்று, தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து, அங்கே எழுந்தருளியுள்ள ஈசன் மேகநாத சுவாமியைப் பூஜித்து மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதே இலையில் வெண் அன்னத்தை நிவேதனம் செய்து தானம் செய்து வந்தாலும், பிரசாதமாக உட்கொண்டாலும் கடும் நோய்கள் காணாமல் போய்விடும். சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் அந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். 

இவற்றில் தசவாயுக்களில் பஞ்ச பிராணன் என்பது பிராணன், ஆபானன், வியானன், உதாதனன், சமானன் ஆகியவையாகும். ஒவ்வொரு வாயுக்களும் நம் உடம்பில் வெவ்வேறு வகையிலான மாற்றங்களை ஏற்படுத்தி உடலை பாதுகாக்கிறது. இவற்றில் சமானன் வாயு என்பது உடம்பில் நடுப்பகுதியில் உள்ளது. உணவை செரிக்க உதவுவதுதான் சமானன் வாயுவின் முக்கியப் பணியாகும். இந்தப் பணியில் சற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன்மூலம் உடல்நலம் குன்றுகிறது. இத்தகைய பாதிப்பை சரி செய்யக்கூடிய மருத்துவ ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது. 

அதுதவிர மனம், உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களில் இருந்து சங்கு புஷ்பக் கொடி மனிதர்களை பாதுகாக்கிறது. இப்படி சிறப்புகளை பெற்றுத் திகழும் சங்கு புஷ்பக் கொடி காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த சங்கு புஷ்பக் கொடி ஆசியாவில் தோன்றியது. தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களிலும் காணப்படுகிறது. சங்கு புஷ்பம் கொடியாக வளரக்கூடியது. ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் வளரும். தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக சங்கு புஷ்பம் பயன்படுத்தப்படுகிறது. 

ரத்தக்குழாய் அடைப்புக்கு முறைப்படி சங்கு புஷ்பங்களை தூய நீரில் ஊறவைத்துக் குடித்து வர, நல்ல பலன் தெரியும். கட்டிகள் மிகவும் வீக்கமாக இருந்தால் சங்குப்பூ இலைச்சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து பருகி வர நிவாரணம் கிடைக்கும். யானைக்கால் வியாதிக்கும் இதன் விதைகள், வேர்கள் சிறந்த மருந்தாகும். சங்கு புஷ்பக் கொடியின் விதை மற்றும் வேர்ப் பகுதிகள் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்தப் பூவிற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளதுபோல் ஆயுள் வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அகநானூறு, ஐங்குறு நூறு, நற்றிணை, குறிஞ்சிப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது சங்கு புஷ்பம்'

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728