Header Ads

  • Breaking News

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 7 PART - II

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 7






    நாம் கொடுத்துள்ள எல்லா விபரங்களும் பஞ்சாங்கங்களில் கொடுக்கப் பட்டு இருக்கும். இருப்பினும் வாசகர்களின் வசதிக்காக நாம் திரும்பவும் கொடுத்துள்ளோம்.



    இப்போது நமக்கு,



    1. எல்லா ஊர்களின் சூரியோதயம் கண்டுபிடிக்கத்தெரியும்.



    2. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ராசியை சூரியன் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் தெரியும்.



    3. ஒவ்வொரு ஊருக்கும் சுதேச மணி கண்டு பிடிக்கத்தெரியும்.



    இந்த மூன்றும் தெரிந்தால் எந்த ஊருக்கும் சுலபமாக இலக்கினம் கண்டு பிடிக்கலாம். நாம் ஏற்கனவே ஒரு ஜாதகம் கணித்து வைத்துஇருக்கிறோம். அதற்கு இப்போது இலக்கினம் கணிப்போம்.



    ஆடி மாதம் 30-ம் தேதி மாலை 5.00 மணிக்கு ஜாதகம் கணித்தோம். ஆனால் எந்த ஊருக்கு என்று கணிக்கவில்லை. இப்போது சென்னையில் அந்த நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தது எனக்கொள்வோம். அதற்கு இப்போது இலக்கினம் கணிப்போம்.



    முதலில் அன்று சென்னையில் சூரிய உதயத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் 30-ம் தேதிக்கு சரியான ஆங்கிலத்தேதி ஆகஸ்ட் 14. சென்னையின் latitude 13 டிகிரி 04-மினிட்ஸ். இதை 13 டிகிரி என முழுமை ஆக்கிக் கொள்ளுங்கள். இதற்கு என்ன சூரியோதயம் எனப் பாருங்கள். மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். காலை 5மணி 51 நிமிஷம் ஆகும்.



    குழந்தை பிறந்த நேரம் (மாலை 5.00 மணி அல்லது) 17.00.00



    அன்று சூரியோதயம் 05.51.00



    சூரியோதயத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் முடியஆன நேரம் 11.09.00



    இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரத்திற்கும், சென்னையின் சுதேச நேரத் திற்கும் உண்டான வித்தியாசம் (-)0.09.45 10.58.15



    இதை நாழிகை ஆக்குங்கள். கிடைப்பது 27 நாழிகை 25 விநாழிகை வரும். அதாவது சூரியஉதயத்திலிருந்து குழந்தை பிறந்த நேரம் வரை 27 நாழிகை 25 வினாழிகை ஆகி இருக்கிறது. இந்த 27நாழிகை 25 விநாழிகை எந்த இலக்கினத்தில் வருகிறது எனப் பார்க்க வேண்டும்.



    நாம் பார்க்கும் மாதம் ஆடி மாதம். அப்போது சூரியன் கடகத்தில் உதிப்பார். 30-ம் தேதிக்கு கடகத்தின் கடைசியில்தான் உதயமாவார். திருகணிதப் பஞ்சாங்கத்தில் ஆடி 30-க்கு எதிராக உதய இலக்கின முடிவு என்ற கட்டத்தைப் பாருங்கள். அங்கே 0.33 எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது அன்று கடகத்தில் 0.33விநாழிகை பாக்கி. இப்போது கணக்குப் போடலாம் வாருங்கள்.









    நா. வி.
    அன்று கடகம் இருப்பு0. 33
    சிம்மம்5. 08
    கன்னி5. 04
    துலாம்5. 17
    விருச்சிகம்5. 30
    தனுசு5. 19
    -------------
    26.51
    -------------
    மகரம்4.45
    -------------
    31.36
    -------------

    26 நாழிகை 51 வினாழிகை முதல் 31 நாழிகை 36 வினாழிகை முடிய மகர இலக்கினம் வருகிறது. நமக்குக் குழந்தை பிறந்த நேரம் 27நாழிகை 25 வினாழிகை. ஆகவே மகர இலக்கினம் தான் குழந்தை பிறந்த இலக்கினம். ஆகவே மகரத்தில் "ல" என்று போடுங்கள். "ல" என்பது இலக்கினத்தைக் குறிக்கும். இப்போது ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

    வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி 30-ம் தேதிக்கு கடகம் 0.21 நாழிகை தான் இருக்கிறது. அவர்கள் 0.21 நாழிகையை எடுத்துக்கொண்டு கணக்குப் போட வேண்டும்.

    இப்போது இலக்கினம் போடக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். இதற்குப் பின் நவாம்சம், ஜனன கால இருப்புதிசை, போட்டால் ஜாதகக் கணிதம் முடிந்து விடும்.



    நாம் தமிழ் நாட்டிலுள்ள ஊர்களுக்குத்தான் Longtitude, Latitude கொடுத்துள்ளோம். இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களுக்குத் தேவை என்றால் "latitude, longtitudes and local meantimes for 5000 places in India" என்ற புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளவும். அதே போல் ஜாதக கணிதம் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமாயின் - First Reader (Casting of Horoscopes- by. K.S. Drishnamoorthy- என்ற புத்தகத்தைப் படிக்கவும்.

    மற்றவை அடுத்த பாடத்தில்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728