Header Ads

  • Breaking News

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 6 PART III

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 6



    தமிழ் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்குண்டான longtitude, மற்றும் latitude, இந்திய நேரத்திற்கும், சுதேச நேரத்திற்கும் உண்டான வித்தியாசத்தையும் மேலே கொடுத்துள்ளோம். ஊங்கள் ஊர் சிறிய ஊறாக இருப்பின் பக்கத்திலுள்ள பெரிய நகரத்தின் longtitude, latitude-ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.

    நாம் பூமியை 12 பாகமாக மேலிருந்து கீழாகப் பிரித்து இருக்கிறோம். அவைகள் மேஷம் முதல் மீனம் முடிய 12 ராசிகளாகும். இந்தப் 12 ராசிகளும் தினமும் ஒருமுறை சூரியன் எதிராகச் சுற்றி வரும். அதாவது 12 ராசிகளும் தினமும் ஒருமுறை சூரியன் எதிராகச் சுற்றி வரும். அதாவது 12-ராசிகளும் சூரியன் முன் உதயமாகும். நமக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த ராசி சூரியன் முன் உதயமாகிறதோ அதுவே இலக்கினம் ஆகும்.

    இலக்கினம் கணிக்க நமக்குத்தேவையானது latitude. இந்த latitude -ஐ வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சூரியோதயம் கண்டுபிடிக்க முடியும். நாம் பூமியை 12 ராசிகளாகப் பிரித்து இருக்கிறோம் அல்லவா? ஒவ்வொரு ராசியும் சம அளவாக இருக்கிறதாக என்றால் இல்லை என்று தான் நாம் சொல்ல வேண்டும். latitude-க்குத் தக்கவாறு ராசிகளின் அளவும் மாறுகிறது. நாம் கீழே 8 degree முதல் 13 degree வரை ஒவ்வொரு ராசியின் அளவு என்னவென்று பட்டியல் போட்டுக் காட்டியுள்ளோம். தமிழ் நாட்டில் உள்ள ஊர்களெல்லாம் இந்த அளவுக்குள்தான் இருக்கின்றன. கீழேகொடுத்து இருக்கும் அளவுகள் எல்லாம் நாழிகை, வினாழிகையில் தான் இருக்கின்றன.



    LATITUDE
    ராசி8
    DEG
    9
    DEG
    10
    DEG
    11
    DEG
    12
    DEG
    13
    DEG
    நா.விநா.விநா.விநா.விநா.விநா.வி
    மேஷம்4.374.364.344.324.304.28
    ரிஷபம்5.085.075.065.055.045.03
    மிதுனம்5.275.275.285.285.285.29
    கடகம்5.165.175.185.205.215.22
    சிம்மம்4.585.005.025.045.065.08
    கன்னி4.544.564.585.005.025.04
    துலாம்5.085.105.125.135.165.17
    விருச்சிகம்5.265.275.285.295.305.30
    தனுசு5.215.205.205.205.195.19
    மகரம்4.524.514.494.484.464.45
    கும்பம்4.264.234.224.204.184.16
    மீனம்4.214.194.174.144.124.04


    மேற்கண்ட விபரங்களெல்லாம் பஞ்சாங்கங்களில் கொடுக்கப் பட்டு இருக்கின்றன. இருப்பினும் வாசகர்களின் சௌகரியத்திற்காக மேலே கொடுத்து இருக்கிறோம். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728