4 அல்லது 5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்று ஒருவரது ஜாதகத்தில் அமைந்திருக்குமேயானால் மணவாழ்க்கையே இல்லாமல் போய்விடும்.
பிறக்கும் போது பெற்றோரின் அரவணைப்பில் வளரும் நாம் பள்ளிக்கு செல்லும் வயதில் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவரின் ஆதரவோடு வளர்கிறோம். திருமண வயது என்ற ஒன்று வந்தவுடன் நமக்கென அமையும் வாழ்க்கைத் துணையின் அரவணைப்பில் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என ஒரு தனித்துவமே வந்து விடுகிறது என்ன தான் பெற்றோரின் அரவணைப்பும் பாசமும் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றாலும், திருமண உறவு என்ற ஒன்று வரும் போது தான் மனிதன் முழுமையடைகிறான்.
மற்ற எல்லா உறவுகளிடம் இருந்தும் ஒரு அடிதள்ளிச் செல்ல நேரிடுகிறது. அதிலும் வரக்கூடிய வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டானால் அந்த வாழ்க்கையே இன்பமயமாகிறது. ஆனால் சிலருக்கு இந்த திருமண உறவு என்பது எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது. சிலருக்கு திருமணம் என்று நடந்தாலும் இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழக்கக்கூடிய சூழ்நிலை, பிரியக்கூடிய வாய்ப்பு என பலவகையில் சங்கடங்கள் உண்டாகின்றது. சிலருக்கு வாழ்க்கை துணையாலேயே பாதிப்புகள் உண்டாகிறது. இதில் ஜோதிட ரீதியாக வாழ்க்கை துணையே ஏற்படாத நிலை ஏன் என பார்ப்போம்.
ஒருவரது ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்ககூடிய குடும்ப ஸ்தானமான 2 லோ, களத்திர ஸ்தானமான 7 லோ பாவ கிரகங்களான சனி, ராகு, கேது போன்றவை அமைவதும், ஜென்ம ராசி என்ன வர்ணிக்கப்படும் சந்திரனுக்கு 2,7 இல் பாவிகள் அமைவதும், 2,7 இக்கு அதிபதிகளோ, களத்திர காரகன் சுக்கிரனோ வக்ரம் பெறுவது நல்லதல்ல, அப்படி அமைய பெற்று அக்கிரகத்தின் திசை அல்லது புக்தி திருமண வயதில் நடைபெற்றால் திருமணம் அமைவதில்லை, அப்படி அமைந்தாலும் பிரிவு, பிரச்சனை ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும்.
ஒருவரது ஜாதகத்தில் 4 க்கு மேற்பட்ட கிரகங்கள் எந்தவொரு வீட்டில் அமைந்தாலும் அது சந்நியாசி வாழ்க்கையை ஏற்படுத்தும். அது போல செவ்வாய், சூரியன், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவை, பாவகிரகங்கள் என்பதால் இவற்றில் 4 அல்லது 5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்று ஒருவரது ஜாதகத்தில் அமைந்திருக்குமேயானால் மணவாழ்க்கையே இல்லாமல் போய்விடும். குறிப்பாக இந்த மாதிரியான கிரக சேர்க்கைகளானது 7 ஆம் வீட்டில் இருந்தாலும், சுக்கிரன் அல்லது 7ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சந்நியாசி வாழ்க்கை வாழ நேரிடம்.
ஜென்ம இலக்னத்திற்கு 3 ஆம் வீடு வீரிய ஸ்தானமாகும், புத்திர காரகன் குரு, களத்திர காரகன் சுக்கிரன் ஆகும். சூரியன் ஆண்மை கிரகமாகும், ஒருவரது ஜாதகத்தில் 3 ஆம் அதிபதி, குரு, சுக்கிரன் ஆகியவை நீச்சம் அல்லது வக்ரம் பெற்றாலோ, சூரியன் நீச்சம் அல்லது சனி இராகு சாரம் பெற்றாலோ ஆண்மை குறைபாடு உண்டாகும்.மேற் கண்ட கிரக அமைப்பு பெற்ற ஆண்கள் திருமண வாழவிற்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.
No comments