கடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட்கள்
கடன் தொல்லை தீர ,வாங்கிய கடனில் சிறிதளவு இந்த நாளில் திருப்பி கொடுத்தால் கடன் விரைவில் தீரும்..இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவி செய்யுங்கள்...கடனால் துன்ப்படுவோர் அதிகம்..!!
செவ்வாய் கிழமையில் பெரும்பாலும் கடனை திருப்பி செலுத்துங்கள் ..குளிகை நேரத்தில் யாரிடமும் கடன் வாங்கி விடாதீர்கள் கடன் அதிகமாகி கொண்டே இருக்கும்..முடிந்தளவு வட்டியை கட்டிவிடுங்கள் இல்லையெனில் அதுவே பெருமளவு கவலையை உண்டாக்கிவிடும்..கடன் நியாயமான செலவுகளுக்கு மட்டுமே வாங்குங்கள்...ஒரு கடன் கட்ட இன்னொரு கடன் என வாங்கி கொண்டே போகாதீர்கள் ஏதேனும் வருமானம் இருந்துகொண்டே இருப்பவர்களுக்கு கடன் பெரிய சுமை அல்ல...விரைவில் தீரும் வருமானம் குறைந்துகொண்டே இருந்தால் முதலில் அதை சரி செய்யுங்கள்....!!
அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல..ஏதேனும் எப்போதோ வரப்போகும் லாபத்தை எண்ணி இன்று வேலைக்கு போகாமல் இருந்தால் அது மோசமானது...அந்த வருமானம் அல்லது லாபம் கிடைக்காமலே போய்விடலாம்...!! தினமும் வேலை செய்யுங்கள் தினமும் சம்பாதியுங்கள்..நீங்கள் கோடீஸ்வரனாக இருப்பினும் வேலை செய்யுங்கள் அதுவே மனம்,உடலுக்கு முக்கிய சக்தியாகும்..!!
கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர் பலர்..கடன் கிடைக்காமல் தவிப்பவர் பலர்...கல்வி கடன்,வீடு கட்ட கடன்,கல்யாணம் செய்ய கடன் ,தொழில் துவங்க கடன் என மற்ரவரிடம் அல்லது வங்கியில் கடனோ உதவியோ பெற பலரும் சிரமப்படுகிறார்கள் எப்போது கடன் கேட்டாகிடைக்கும் என பார்த்தால்,உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் எப்போது வருகிறாரோ அப்போது கடன் மற்ரும் உதவி யாரிடத்தில் கேட்டாலும் கிடைக்கும்.1,.3,6,7,8,12 ல் சந்திரன் இருக்கும் போது கடன் கேட்டால் கிடைக்காது...!! இன்று விருச்சிகம் ராசிக்கு 11ல் சந்திரன் இருக்கிறார்..!!
மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த சவத்தை எப்போது இடுகாட்டுக்கு எடுத்து செல்வார்கள் தெரியுமா..? குளிகை நேரம் பார்த்துதான் சவத்தை எடுப்பார்கள்..காரணம் குளிகை நேரம் என்பது திரும்ப திரும்ப அந்த காரியம் நடக்க வைக்கும்...எனவெ அந்த வீட்டில் அடிக்கடி மரணம் நிகழாதிருக்க,குளிகை நேரம் முடிந்த பிறகுதான் சவத்தை தூக்குவார்கள்..சிலர் கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கிபெரிய கடன்காரர் ஆகிவிடுவர்கள்..ஊரைவிட்டே செல்லும் நிலையோ தற்கொலை செய்யும் நிலையோ கூட ஏற்படுத்திவிடும்...எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம்ன் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும்....ராகுகாலம்,எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்..
கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்..
சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்..
ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..
திண்டிவனம் அருகில் இருக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று காலை 5 மணிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட கடுமையான நெருக்கடிகள் தீரும்.
குலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெள்ர்ணமி அன்றும் செல்லலாம்..16 விதமான அபிசேகம் செய்து சர்க்கரை பொங்கல் வைத்து கோயிலுக்கு வருவோருக்கு பிரசாதமாக கொடுக்கவும் 27 நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..
ஜாதகத்தில் என்ன திசைபுத்தி நடக்கிறதோ அதற்கேற்ரப்படி தான தர்மம் செய்து கர்ம வழி தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.

இது உண்மையா
ReplyDelete