Header Ads

  • Breaking News

    108 சித்தர்கள் அன்றும், இன்றும், என்றும், என்றென்றும், அமர்ந்து வழிகாட்டும் ஆலயங்கள் , அபூர்வ தகவல்கள்

    ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் -
    இறைவனை நாடு. செய்யும் அனைத்திலும்
    இறையே உள்ளது , என்கிற
    மனப்பான்மையுடன் வாழ்ந்து - இறைவனுக்கு
    அடுத்த நிலைமையான சித்த நிலைமையை
    அடைந்தவர்கள்.
    இறை தரிசனம் கண்டு , இறையுடன் இரண்டற
    கலந்து - இன்றும் நாடி வரும் பக்தர்களை , நல்
    வழிப்படுத்தும் அவதார புருஷர்கள்.
    மனிதர்களாய் பிறந்ததற்கே வாழ்வில் ஒரு
    அர்த்தம் உள்ளது. .. தன்னையறிதல் முதல் படி.
    அதன் பிறகு - மற்ற அனைத்தும் , உங்களுக்கே
    வசப்படும். மனிதப் பிறவியின் நோக்கம் ,
    வெறுமனே வாழ்ந்து , மடிந்து போவது அல்ல. ...
    பிறவி நோக்கம் அறிவதற்கு , கீழே கொடுக்கப்
    பட்டுள்ள - சித்தர்கள் அமைந்திருக்கும் -
    ஆலயங்கள் , அவர்களின் ஆத்மா சக்தி
    உங்களுக்கு வழி காட்டும்.

    108 சித்தர்கள்
    1. திருமூலர் - சிதம்பரம்.
    2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி
    3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி,
    ஆணிலையப்பர் கோவில்.
    4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
    5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
    6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
    7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
    8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
    9. அகத்தியர் – திருவனந்தபுரம்,
    கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
    10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
    11. கோரக்கர் – பேரூர்.
    12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை
    விருத்தாசலம்.
    13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
    14. உரோமரிசி - திருக்கயிலை
    15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
    16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
    17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
    18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில்,
    இராமேஸ்வரம்.
    19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார்
    கோவில்.
    20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
    21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
    22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
    23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
    24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
    25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
    26. காசிபர் - ருத்ரகிரி
    27. வரதர் - தென்மலை
    28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
    29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
    30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
    31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
    32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
    33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
    34. கமல முனி - ஆரூர்
    35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
    36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
    37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
    38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
    39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
    40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
    41. வள்ளலார் - வடலூர்.
    42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
    43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
    44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
    45. ராகவேந்திரர் - மந்திராலயம்.


    46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை,
    மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
    47. குமரகுருபரர் - காசி.
    48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
    49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
    50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
    51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சிஅம்மன்
    கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
    52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
    53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
    54. யுக்தேஸ்வரர் - பூரி.
    55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
    56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின்
    ஜீவ சமாதிகள் உள்ளன.
    57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
    58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
    59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
    60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
    61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை
    மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
    62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை
    காளவாசல்.
    63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
    64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
    65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
    66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் –
    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்
    திருக்கோவில்.
    67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து
    செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது
    68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
    69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர்
    ஏரிக்கரையில் உள்ளது.
    70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
    71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
    72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன்
    சந்நிதி.
    73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
    74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை
    அம்பலத்தாடையார் மடம்.
    75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
    76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு
    வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
    77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு
    அருகிலுள்ள கருவடிக்குப்ப
    78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள
    முதலியார் பேட்டை.
    79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர்
    செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
    80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள
    குதிரைக்களம் அருகே.
    81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
    82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை
    அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
    83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில
    நதிக்கரையில்.
    84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை
    அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
    85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை
    பீடத்திற்கு அருகில் உள்ளது.
    86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில்
    கெடில நதிக்கரையில்.
    87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த
    பள்ளித் தென்னல்.
    88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
    89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார்
    சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
    90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள
    புதுப்பட்டி.
    91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள
    சுதேசி காட்டன் மில் எதிரில்
    92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி
    சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
    93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) -
    திருவண்ணாமலை.
    94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள
    கோட்டூர்.
    95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர்
    அருகே பனையூர்.
    96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
    97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை
    மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
    98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் -
    சென்னை பூந்தமல்லி
    .99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
    100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில்
    உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள
    லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
    101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி,
    ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ.
    தொலைவில் உள்ளது.
    102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
    103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள
    கொம்மடிக் கோட்டை.
    104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
    105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் -
    கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
    106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில்
    (மதுரை)
    107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
    108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728