Header Ads

  • Breaking News

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1 பகுதி-3

    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1



    நாம் தற்போது காலத்தை எப்படிக் கணக்கிடுகின்றோம் ? இன்று 1/23/2002, நாம் ஜனவரி மாதம் 23ம் நாள், 2002 ஆண்டு எனக் கூறுகின்றோம். இது நமக்கு ஆங்கிலேயர் கற்றுக் கொடுத்த முறை. நமது பண்டைய முறை அப்படி அல்ல. நாம் கணிதம் செய்ய வேண்டியது எல்லாம் நமது பண்டைய முறைபடித்தான். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு.

    1. கிருதயுகம்.
    2. திரேதாயுகம்
    3. துவாபரயுகம்
    4. கலியுகம்.


    இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் இப்பொது 3 யுகங்கள் முடிந்து கலியுகத்தில் இருக்கின்றோம். கலியுகத்தில் தற்போது 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

    ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சூரியன் இந்த வான மண்டலத்தை ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். சூரியன் ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது சூரிய பகவான் வானமண்டலத்தை சுற்றி முடித்து அடுத்த சுற்று அன்று ஆரம்பம் செய்கின்றார். வானவெளி மண்டலத்தின் ஆரம்ப இடம் எது ? இது இருந்தால்தானே அங்கிருந்து ஆரம்பம் செய்ய முடியும். அது தெரிந்து கொள்ள நாம் வானமண்டலத்தின் படத்தைப் போடுவோம். வானமண்டலம் நீள வட்ட வடிவமான பாதையாக் இருக்கிறது என மேலே கூறியுள்ளோம். நாம் நீளவட்டம்மாகப் போடாமல் சதுரமாகவே போடுவோம். அதுதான் எளிது. வானமண்டலத்தைச் சதுரமாகப் போட்டு அதை 12 பகுதிகளாக அதுவும் சம பகுதியாக போடுவோம். அது கீழே காட்டியுள்ளபடி இருக்கும்.



    நாம் மேலே வானமண்டலத்தின் படத்தைப் போட்டு 12 பகுதியாகப் போட்டு இருக்கிறோம். இந்த வானமண்டலத்தின் ஆரம்ப இடம் ஒன்று என்று இலக்கம்மிட்ட கட்டம்தான். அதன் ஆரம்பப் பகுதியை 2 கோடுகள் போட்டுக் காட்டியுள்ளோம். இந்த இடத்திலிருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது. இந்த ஏப்ர 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய சுற்றும். இந்தம்காலம் தான் ஒராண்டாகும். இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் "விஷ¤" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

    1. பிரபவ
    2. விபவ
    3. சுக்கில
    4. பிரமோதூத
    5. பிரஜோத்பத்தி
    6. ஆங்கீரஸ
    7. ஸ்ரீமுக
    8. பவ
    9. யுவ
    10. தாது
    11. ஈஸ்வர
    12. வெகுதான்ய
    13. பிரமாதி
    14. விக்கிரம
    15. விஷ¤
    16. சித்ரபானு
    17.சுபாணு
    18. தாரண
    19. பார்த்திப
    20. விய
    21. சர்வகித்து
    22.சர்வதாரி
    23. விரோதி
    24. விக்ருதி
    25. கர
    26. நந்தன
    27. விஜய
    28. ஜய
    29. மன்மத்
    30. துர்முகி
    31. ஹேவிளம்பி
    32. விளம்பி
    33. விகாரி
    34. சார்வரி
    35. பிலவ
    36. சுபகிருது
    37. சோபகிருது
    38. குரோதி
    39. விசுவாசு
    40. பராபவ
    41. பிலவங்க
    42. கீலக
    43. சௌமிய
    44. சாதரண
    45. விரோதிகிருது
    46. பரிதாபி
    47. பிரமாதீச
    48. ஆனந்த
    49. ராஷஸ
    50. நள
    51. பிங்கள
    52. காளயுக்தி
    53. சித்தாத்திரி
    54. ரௌத்திரி.
    55. துன்பதி
    56. துந்துபி
    57. ருத்ரோகாரி
    58. ரக்தாஷி
    59. குரோதன
    60. அக்ஷய

    இப்பொது தமிழ் ஆண்டு என்றால் என்ன என்று தெரிந்துகொண்டீர்கள். சூரியன் வானமண்டலத்தைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமே ஒர் ஆண்டாகும். வானமண்டலத்தின் ஆரம்ப இடம் எது எனவும் தெரிந்து கோண்டீர்கள். இனி அடுத்து மாதம் என்றால் என்ன, நட்சத்திரம் என்றால் என்ன ? திதி என்றால் என்ன என்பவைகளை வரும் இதழ்களில் பார்ப்போம்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728